Type Here to Get Search Results !

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய போட்டியில் ஐதராபாத்-பெங்களூரு அணிகள் மோதல்

 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய போட்டியில் ஐதராபாத்-பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவான ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெறும் 41வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

முன்னாள் சாம்பியனான ஹைதராபாத் இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 5ல் (மும்பை, சென்னை, பஞ்சாப், பெங்களூரு, டெல்லிக்கு எதிராக) வெற்றியும், 2ல் (கொல்கத்தா, குஜராத் அணிக்கு எதிராக) தோல்வியும் கண்டுள்ளது. முதல் 3 ஆட்டங்களில் 2ல் தோல்வியடைந்த அந்த அணி, தொடர்ந்து 4 ஆட்டங்களில் வெற்றியை ருசித்துள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் குவித்த அணி என்ற சாதனையை (பெங்களூருக்கு எதிராக 287) வைத்திருக்கும் ஹைதராபாத் ரன் வேட்டையில் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. நடப்பு தொடரில் 3 முறை 260 ரன்களுக்கு மேல் குவித்த ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் (1 சதம், 2 அரைசதம் உட்பட 324), ஹென்ரிச் கிளாசன் (268), அபிஷேக் சர்மா (257) ஆகியோர் சூப்பர் பார்மில் உள்ளனர். நடராஜன், கேப்டன் கம்மின்ஸ், மயங்க் மார்கண்டே ஆகியோர் பந்துவீச்சை பலப்படுத்துவார்கள்.

இந்த சீசனிலும் பெங்களூரு அணி பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளது. 2வது லீக் ஆட்டத்தில் பஞ்சாபை வீழ்த்திய பெங்களூரு அணி 7 ஆட்டங்களில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. கொல்கத்தாவுக்கு எதிரான கடைசி போட்டியில் பெங்களூரு அணி 221 ரன்கள் குவித்து ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது. இதன் காரணமாக அந்த அணியின் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு மங்கியது.

மீதமுள்ள 6 ஆட்டங்களில் முழுமையாக வெற்றி பெற்று, மற்ற ஆட்டங்களின் முடிவும், ரன் ரேட்டும் சாதகமாக அமைந்தால் மட்டுமே, அடுத்த சுற்று வாய்ப்பையாவது அணியால் யோசிக்க முடியும். இன்றைய ஆட்டத்திலும் சறுக்கினால் கதை முடிந்துவிடும்.

பெங்களூரு அணியின் ஆரஞ்சு தொப்பியை விராட் கோலி (1 சதம், 2 அரைசதம் உட்பட 379 ரன்கள்) தக்கவைத்துள்ளார். கேப்டன் பாப் டு பிளெசிஸ் (239), ரஜத் படிதார், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் நல்ல பார்மில் உள்ளனர். ஆனால் அணியின் பந்துவீச்சு தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது. அதிகபட்சமாக யாஷ் தயாள் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது சிராஜ், கேமரூன் கிரீன், கரண் ஷர்மா உள்ளிட்ட பந்துவீச்சாளர்கள் எதிர்பார்த்த அளவுக்கு பந்துவீசவில்லை. கடந்த 2 ஆட்டங்களில் அந்த அணி 220 ரன்களுக்கு மேல் கொடுத்திருப்பதில் இருந்தே புரிந்து கொள்ளலாம். எனவே பெங்களூரு அணியின் பந்துவீச்சில் ஏற்றம் காண வேண்டியது அவசியம்.

மொத்தத்தில் ருத்ரதாண்டவமாடு ஹைதராபாத் அணியின் சவாலை பெங்களூரு மட்டையால் சமாளிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இவ்விரு அணிகளும் இதுவரை 23 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. ஹைதராபாத் 13 ஆட்டங்களிலும், பெங்களூரு 10 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

போட்டிக்கான இந்த இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-

ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், ஹென்ரிச் கிளாசென், மார்க்ராம், அப்துல் சமத், ஷபாஸ் அகமது, கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், டி.நடராஜன், நிதிஷ் குமார் ரெட்டி, மயங்க் மார்கண்டே அல்லது வாஷிங்டன் சுந்தர்.

பெங்களூரு: விராட் கோலி, பாப் டு பிளிசிஸ் (கேப்டன்), வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், மஹிபால் லோம்ரோர் அல்லது அனுஜ் ராவத், விஜய்குமார் வைஷாக் அல்லது கரண் சர்மா, ரீஸ் டேப்லி, லாக்கி பெர்குசன், யாஷ் தயாள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom