Type Here to Get Search Results !

சங்கீத நாடக அகாடமி விருதுகள் இன்று குடியரசுத் தலைவரால் வழங்கப்பட உள்ளது..!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 2022, 2023 ஆண்டுகளுக்கான சங்கீத நாடக அகாடமி விருதுகளை 94 சிறந்த கலைஞர்களுக்கு இன்று வழங்குகிறார்.

இசை, நடனம், நாடகம், நாட்டுப்புற, பழங்குடியினக் கலைகள் மற்றும் பொம்மலாட்டம் உள்ளிட்ட கலைகளில் சிறந்து விளங்கும் 94 கலைஞர்களுக்கு 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான சங்கீத நாடக அகாடமி விருதுகளை (இரண்டு கூட்டு விருதுகள்) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்குவார்.

சங்கீத நாடக அகாடமி விருதுகள் இன்று குடியரசுத் தலைவரால் வழங்கப்பட உள்ளது..! Sangeetha Natak Akademi Awards

மத்திய கலாச்சாரம், சுற்றுலா, வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, சட்டம், நீதி (தனி பொறுப்பு), பாராளுமன்ற விவகாரங்கள், கலாச்சாரம் அர்ஜுன் ராம் மேக்வால், கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் கோவிந்த் மோகன், சங்கீத நாடக அகாடமியின் தலைவர் டாக்டர் சந்தியா புரேச்சா விருதை வழங்குவார். விழாவில் கலந்து கொள்வார்கள்.

2022, 2023 ஆண்டுகளுக்கான அகாடமி விருதுகளைத் தவிர, அவர் 7 புகழ்பெற்ற கலைஞர்களுக்கு (ஒரு கூட்டு விருது) சங்கீத நாடக அகாடமி விருதை (அகாடமி ரத்னா) வழங்குவார்.

சங்கீத நாடக அகாடமி விருது (அகாடமி ரத்னா) என்பது ஒரு சிறந்த கலைஞருக்கு அவர் நிகழ்த்தும் கலை வடிவத்திற்கு சிறப்பான பங்களிப்பிற்காக வழங்கப்படும் மிக உயர்ந்த கௌரவமாகும். அகாடமி விருதுகள் 1952 முதல் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom