Type Here to Get Search Results !

நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்….

இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று கொல்கத்தாவில் தொடங்கி வைக்கிறார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஹவுரா மைதானம்-எஸ்பிளனேட் மெட்ரோ பாதையானது நீருக்கடியில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையை கொண்ட நாட்டிலேயே முதன்மையானது. இது ஹவுரா மற்றும் கொல்கத்தா ஆகிய இரட்டை நகரங்களை இணைக்கிறது. இந்த வழித்தடத்தில் 6 நிலையங்கள் உள்ளன. இதில் 3 நிலையங்கள் நிலத்தடியில் அமைக்கப்பட்டுள்ளன.

நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.... Prime Minister Modi to inaugurate the underwater metro train service today

ரயில்கள் ஹூக்ளி ஆற்றை 32 மீட்டர் ஆழத்திலும், ஆற்றின் கீழ் சுமார் 520 மீட்டர் நீளத்திற்கு 45 வினாடிகளில் கடக்கும். இதனை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

கொல்கத்தா மெட்ரோவின் ஹவுரா மைதானம்-எஸ்பிளனேட் மெட்ரோ பிரிவு, கவி சுபாஷ்-ஹேமந்தா முகோபாத்யாய் மெட்ரோ பிரிவு மற்றும் தாரதாலா-மஜெர்ஹாட் மெட்ரோ பிரிவு ஆகியவற்றையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்தப் பிரிவுகள் சாலைப் போக்குவரத்தைக் குறைக்கவும், தடையற்ற மற்றும் வசதியான போக்குவரத்துச் சேவைகளை வழங்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom