Type Here to Get Search Results !

பா.ம.க.வின் செல்வாக்கை நம்பிய அ.தி.மு.க 'தப்புக்கணக்கான' கணக்கு


பா.ம.க.வின் செல்வாக்கை நம்பிய அ.தி.மு.க. தமிழக வட மாவட்டங்களில் பெரும் சரிவை சந்தித்துள்ளது. தி.மு.க.வுக்கு மிகப் பெரிய வெற்றியை வட மாவட்டங்கள் கொடுத்துள்ளன.

தமிழக சட்டசபை தேர்தலில் 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்த அ.தி.மு.க.வுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது. எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு பெரிய அடித்தளமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக சென்னையில் உள்ள 16 தொகுதிகள்; திருவள்ளூர் மாவட்டத்தில் 10 தொகுதிகள்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் நான்கு தொகுதிகள் முழுமையாக தி.மு.க.வுக்கு கிடைத்துள்ளன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுஉள்ளது. மற்ற தொகுதிகளை தி.மு.க. கூட்டணி முழுமையாக கைப்பற்றியது. வட மாவட்டங்களில் செல்வாக்கு பெற்ற பா.ம.க. தங்கள் கூட்டணியில் இருப்பதால் இந்த மாவட்டங்களில் எல்லாம் எளிதாக வெற்றி பெறலாம் என அ.தி.மு.க. கணக்கு போட்டது. அந்த கணக்கு கை கூடவில்லை.

பா.ம.க.வுக்கு அதிக செல்வாக்கு உள்ளதாக கருதப்பட்ட திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார், வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களிலும் தி.மு.க. மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. இந்த மாவட்டங்களில் பா.ம.க.வால் அதிக ஓட்டுகள் கிடைக்கும் என அ.தி.மு.க. நம்பியது.

வன்னியர்கள் ஓட்டை பெறுவதற்காக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 10.5 சதவீதம் தனி இட ஒதுக்கீடும் வழங்கியது. பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்ததால் அறக்கட்டளைகளை ஒழுங்குபடுத்தும் சட்ட மசோதாவையும் அ.தி.மு.க. அரசு திரும்ப பெற்றது.

ஆனால் தேர்தலில் அ.தி.மு.க. - பா.ம.க.வின் ஜாதிய கணக்குகள் தவிடுபொடியாகி விட்டன. நாங்கள் ஜாதியவாதிகள் அல்ல என வட மாவட்ட வாக்காளர்கள் தேர்தலில் பாடம் புகட்டியுள்ளனர். இதன் பலனாகவே அ.தி.மு.கவுக்கு வடக்கு கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

வட மாவட்டங்களின் ஜாம்பவானாக அ.தி.மு.க. மலை போல் நம்பிய பா.ம.க.வும் இந்த தேர்தலில் படு தோல்வியை சந்தித்திருப்பது ஜாதி அரசியல் கட்சிகளுக்கும் அதை நம்பும் கட்சிகளுக்கும் பாடமாக அமைந்துள்ளது.அ.தி.மு.க. கூட்டணியில் அனைத்து கட்சிகளுக்கும் முன்னதாக 23 தொகுதிகளை பெற்ற பா.ம.க. ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom