Type Here to Get Search Results !

தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம் திரைப்படம் ஜூன் 18ஆம் தேதி வெளியீடு....



இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம் திரைப்படம் ஜூன் 18ஆம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். 


ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான இந்தத் திரைப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதி செவ்வாய்க்கிழமை வெளியானது. 

அதன்படி ஜூன் 18ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜகமே தந்திரம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom