Type Here to Get Search Results !

பொய் சொல்லியே அரசியல் நடத்தும் கட்சி திமுக.. கன்னியா குமரியில் எடப்பாடியார்.....!


சட்டமன்ற தேர்தலையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கன்னியா குமரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அப்போது அவர் பேசியதாவது: பொய் சொல்லி அரசியல் நடத்தும் கட்சி திமுக காங்கிரஸ் கூட்டசி கட்சிகள்தான், எங்களுக்கு எம்.எல்.ஏக்கள் முக்கியம் அல்ல மக்கள்தான் முக்கியம். நல்ல சாலை, குடிநீர் வசதிகளை கொண்டுவருகிறோம். தேர்தல் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். மிக்‌சி கிரைண்டர் வழங்கினோம்.  ஆனால் அதிமுகவைப் பற்றி தவறான செய்தியை பரப்புகிறார்கள். திமுகவிடம் சொல்லுங்கள் அதிமுக கொடுத்தார்கள். திமுக ஆட்சி இருண்ட ஆட்சி கடுமையானமின் வெட்டு. இன்று தடையில்லா மின்சாரம் வழங்குகிறோம். அதிகமான தொழிற்சாலைகள் வருகிறது. 

மத்திய அரசு உதவிகள் செய்கிறது. இன்று தமிழகம் வெற்றிநடைப்போடும் தமிழகம் என்ற நிலையை அடைந்துள்ளது. விவசாயம், மீன்பிடிக்கு ஏராளமான திட்டங்கள் கொண்டுவந்துள்ளோம். மீனவர்ககுக்கு காங்கிரீட் வீடுகள், மானியத்தோடு, வரி விலக்கோடு வழங்குகிறோம், 18000 லிட்டர் டீசல் 20 ஆயிரமாக வழங்குகிறோம். மண்ணெண்ணை. மீன்பிடி தடைக்காலத்தில் 5 ஆயிரம் கொடுப்பதை 7500 வழங்கப்படும். மீனவர்கள் பல்வேறு பிரச்னையால் கடன் பெறுகிறார்கள். மீனவர்களுக்கென்று தனி வங்கி ஏற்படுத்தப்படும். மீனவர்கள் விபத்தில் இறந்தால் அவர்களுக்கு நிவாரணமாக 2 லட்சத்தில் இருந்து ஐந்து லட்சமாக வழங்கப்படும். உள்நாட்டு மீனவர்களுக்காக விரிவான திட்டம் கொண்டுவரப்படும்.

சுற்றுலா மாவட்டம் இது. கன்னியாகுமரியில் சுற்றுலாவை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும். திருவள்ளுவர் சிலைசிலைக்கு இடையில் 20 கோடியில் பாலம் அமைத்து பொதுமக்கள் வசதிக்கு திட்டம் நிறைவேற்றப்படும். படகு நிறுத்து தளம் அமைக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தில் மட்டும் நிறைய திட்டங்கள் அறிவித்திருக்கிறோம். அம்மா மினி கிளீனிக், குடிமராமத்து திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. ஏரி குளங்களை தூர்வாரி தண்ணீர் சேமித்து வைத்துள்ளோம். இந்த மாவட்டம் சிறந்த மாவட்டம், சிறந்த மாவட்டமாக, எழுச்சி மாவட்டமாக வளரஅனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ஆண்டுக்கு ஆறு சிலிண்டர். 

பெண்கள் துணி துவைதுவைப்பது கடினமான பணி எனவே எல்லா அரிசி குடும்ப அட்டைதார்களுக்கும் வாஷிங் மிஷின், ரேஷன் அரிசி வந்து சேரும். கட்டணம் இல்லாமல் கேபிள் கணெக்‌ஷன் வழங்கப்படும். விவசாய சங்கத்தினர், விவசாயிகள் கோரிக்கைகளை ஏற்று பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மககிர் குழுக்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும். மாதம் 1500 ரூபாய் வழங்கப்படும். 18 வயது நிரம்பியவர்களுக்கு ஓட்டுனர் பயிற்சி வழங்கி உரிமம் வழங்கப்படும். வீடும், நிலமும் இல்லாதவர்களுக்கு சொந்த நிலம். காங்கிரீட் வீடு கட்டி கொடுக்கப்படும். நகரத்தில் அடுக்குமாடி வீடுகள் கட்டி கொடுக்கப்படும். இன்னும் பல திட்டங்கள் அம்மா அரசு அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலிலும். சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom