திமுக-காங்கிரஸ் கூட்டணி இடையே விரிசல்.... மூன்றாவது அணி....?

 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால், தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்டவைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளது. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டி ஆர் பாலு தலைமையில் ஒரு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. திமுகவில் இந்திய முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ஆனால் திமுகவின் முக்கிய கட்சியாக விலகும் காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. காங்கிரஸ் 40 தொகுதிகளை கேட்டு வரும் நிலையில், திமுக 20 முதல் 25 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடிவு செய்து உள்ளது. இதனால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது

மேலும் பிரச்சாரத்திற்காக ராகுல்காந்தி இரண்டு முறை தமிழகம் வந்தோம். இதுவரை ஸ்டாலினை சந்திக்கவில்லை. மேலும் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி எந்த ஒரு இடத்திலும் திமுகவின் பெயரையோ அல்லது ஸ்டாலின் பெயரையும் குறிப்பிடவில்லை. இவை திமுக-காங்கிரஸ் கூட்டணி இடையே ஏற்பட்டுள்ள விரிசலையே காட்டுகிறது. காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி மூன்றாவது அணியில் சேர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Post a comment

0 Comments