Breaking

6/trending/recent
Type Here to Get Search Results !

ஆ.ராசா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. அப்படி எடுக்கப்பட்டாலும் அது தேர்தலுக்கான கண் துடைப்பு......


ஆ.ராசா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. அப்படி எடுக்கப்பட்டாலும் அது தேர்தலுக்கான கண் துடைப்பு நடவடிக்கையாக மட்டுமே இருக்கும் என மூத்தப் பத்திரிகையாளர் மாலன் நாராயணன் கூறியுள்ளார். 

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட தி.மு.க முன்னாள் அமைச்சர் ராசா, ”ஸ்டாலின் நல்ல உறவின் மூலம் பிறந்த குழந்தை” என்றும் ”முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கள்ள உறவில் பிறந்த குழந்தை” என்று பேசினார். ராசாவின் இந்த பேச்சுக்கு பெண்கள் அமைப்பினர் கடும் கண்டம் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் என்றும் பார்க்காமல் தரம் தாழ்ந்த வகையில் ராசா பேசியது அரசியல் வட்டத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க பெண்களுக்கு எதிரான கட்சி என்பதை ராசா மீண்டும் நிரூபித்துள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில், இது தொடர்பாக மூத்தப் பத்திரிகையாளர் மாலன் நாராயணன் அவரது முகநூல் பக்கத்தில்;- இது போன்று பெண்களை இழிவுபடுத்திப் பேசும் பாரம்பரியம் திமுகவில் நெடுங்காலமாக உண்டு. 'நாடாவை அவிழ்த்துப் பார்த்தால் தெரியும்' என்பதில் தொடங்கி பேரன் உதயநிதி சசிகலா பற்றிப் பேசுவது வரை அந்தப் பாரம்பரியம் நீள்கிறது. இந்தப் பேச்சுக்கள் spontaneous ஆக அந்த நொடியில் வெளிப்படுபவை. ஆழ்மனதில் பெண்களைப் பற்றி இருக்கும் அபிப்பிராயம்தான் அந்தக் கணத்தில் வெளிப்படுகிறது.

ஜெயலலிதாவின் சேலையை உருவ முற்பட்டதும் அது போன்ற ஸ்பான்டேனியஸ் ரெஸ்பான்ஸ்தான். பெண்களை உடலைத் தாண்டி பார்க்க முடியாத பார்வையின் வெளிப்பாடு அது. வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாத நேரங்களில் எல்லாம்  வன்மத்தோடு வசைகளிலும் தனிமனித தாக்குதலிலும் ஈடுபடுவது திமுகவின் வழக்கம். அது காமராசரின் கருநிறத்தில், எம்ஜி.ஆரைக் கிழவராக சித்தரிக்கும் முரசொலி கார்ட்டூனில்  ராஜாஜியின் ஜாதி பற்றிய விமர்சனத்தில், இந்திராகாந்தியின் கைம்பெண்மை பற்றிய எள்ளலில், ஜெயலலிதாவை நடிகையாகக் கேலி பேசுவதில் மட்டுமல்ல, அவர்களை விமர்சித்து எழுதுகிற சாதாரணமானவர்களைத் தாக்குவது வரை வெளிப்படும் இந்த வன்மம்  பெண்ணாக இருந்தால் உடல் ரீதியாகவும் ஆண்களாக இருந்தால் ஜாதி ரீதியாகவும் வெளிப்படும். 

பட்டியல் இனத்தவருக்கு நீதிபதி பதவிகளை பிச்சை போட்ட ஆர். எஸ். பாரதியின் பேச்சு ஓர் அண்மைக்கால உதாரணம். ஆ.ராசாவின் இந்தப் பேச்சு எதைக் காட்டுகிறது?  திமுக பதற்றமடைந்திருப்பதைக் காட்டுகிறது. ஏன் பதற்றம்? எல்லோருக்கும் முன்னதாக அது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய போது அதன் வெற்றி வாய்ப்புக்கள் பிரகாசமாக இருப்பதாக  ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டது.  அதிமுக பிரசாரக் களத்தில் இறங்கிய பின், குறிப்பாக எடப்பாடியாரின் அறிவிப்புக்களுக்கும், பிராசாரத்திற்கும் பின்  அந்த பிம்பம் கலையத் தொடங்கியது.  

இப்போது போட்டி நெருக்கமாகி வருகிறது. 'கேக் வாக்; என்ற நிலை மாறிவிட்டது. கஷ்டப்பட்டு உழைக்கணும் என்று திமுக தலைமையே தனது தொண்டர்களிடம் பேசத் தொடங்கியிருக்கிறது. இந்த மாற்றத்திற்குக் காரணம் எடப்பாடியின் பிரசாரம். அதனால் எடப்பாடி தனிப்பட்ட முறையில் குறி வைக்கப்படுகிறார். கட்சி ரீதியாக ஆ.ராசா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. அப்படி எடுக்கப்பட்டாலும் அது தேர்தலுக்கான கண் துடைப்பு நடவடிக்கையாக மட்டுமே இருக்கும். சரி, வாக்காளர்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம்.? நடவடிக்கை எடுக்க நம்மிடம் வாக்கு என்ற ஓர் வாய்ப்பு இருக்கிறதே? என கூறியுள்ளார். 

Post a comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Below Post Ad