Type Here to Get Search Results !

அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஈபிஎஸ், ஓபிஎஸ் பக்கமே..! வெற்றி உறுதி


மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வமும் ஒன்றிணைந்து உற்சாகமாக கொண்டாடினர்.

அதிமுகவினர் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி, உறுதி மொழி எடுக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை மு. ஓ. பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்ததையடுத்து தொண்டர்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றியும், உறுதி மொழி எடுத்தும் பிறந்தநாளை கொண்டாடினர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் தலைமையில் ஓரணியாக நிற்பது, தேர்தலில் தங்கள் பலத்தை காட்டுவது போல் பிரதிபலிக்கிறது.

கட்சி அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர் செல்வமும் கேக் வெட்டி மாறி மாறி ஊட்டி கொண்டனர். 

பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கியும் பிறந்தநாளை சிறப்பித்தனர்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிறந்தநாள் விழாவில் தொண்டர்கள் அனைவரையும் ஒன்றிணைத்தது, தேர்தல் நேரத்தில் தாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதையும், தேர்தலை சந்திக்க தயார் நிலையில் இருக்கிறோம் என்பதையும் வெளிப்படுத்துகிறது.

சசிகலாவின் வருகைக்கு பிறகு, அமைச்சர்கள்,எம்.எல்.ஏக்கள் நிர்வாகிகளுடனான சந்திப்பு போன்ற எந்தவொரு அசைவும்   அதிமுகவில் சலசப்பை உருவாக்காது என்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் திரண்ட அணி உணர்த்துகிறது.