Type Here to Get Search Results !

இந்த முறை வங்கத்தில் முதல்முறையாக தாமரை பூப்பதை அனைவரும் காணப் போகிறீர்கள்.... ஸ்மிருதி இரானி


மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு பாஜக  எம் பி ஸ்மிருதி இரானி கட்சி தொண்டர்களுடன் இருசக்கர பேரணியில் கலந்து கொண்டார். அதில் அவர் உற்சாகமாக ஸ்கூட்டி ஓட்டும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சாலையில் ஸ்கூட்டி  ஒட்டிய நிலையில் ஸ்மிருதி இரானியும் அதே பாணியில் ஸ்கூட்டி ஓட்டி ரோட் ஸோ நடத்தியுள்ளார்.  தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய ஐந்து  மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் சுமார் 294 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் எப்படியேனும் ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. 

அதற்காக பாஜகவின் முன்னணித் தலைவர்களான மோடி, அமித்ஷா, ஜேபி நட்டா உள்ளிட்டோர் மேற்கு வங்கத்திற்கு அடுத்தடுத்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எப்படியேனும் திர்ணாமுல் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அக்காட்சியின் எம்பி ஸ்மிருதி இரானி  பாஜகவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இருசக்கர வாகன பேரணியில் கலந்துகொண்டுள்ளார்.  வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெற்ற இந்த பேரணியில் ஸ்மிருதி இரானி தலையில் ஹெல்மெட் அணிந்து ஒய்யாரமாக ஸ்கூட்டி ஓட்டினார். இப்புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இதேபோன்ற அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இருசக்கர வாகன பேரணியில் கலந்துகொண்டு ஸ்கூட்டி ஓட்டினார். அது வெகுவாக அம்மாநில மக்களின் கவனத்தை பெற்றிருந்தது. 

இந்நிலையில் ஸ்மிருதி இரானியும்  ஸ்கூட்டி ஓட்டி உள்ளது அதிக கவனம் பெற்றுள்ளது. இருவரும் ஸ்கூட்டி ஓடியதற்கு உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மம்தா பானர்ஜி ஸ்கூட்டி ஓட்டினார், ஆனால் ஸ்மிருதி இரானி தேர்தல் பிரச்சாரத்திற்காக ஸ்கூட்டி ஓட்டியுள்ளார்.  இப்பேரணிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்மிருதி இராணி, மம்தா பானர்ஜியை கடுமையாக தாக்கினார்,  வங்காளத்தில் ஏராளமான மக்கள் மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பேரணியில் கலந்து கொண்டதற்காகவும், மாற்றுக்கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கட்சியில் இணைந்ததற்காகவும் அவர் தனது சார்பில் நன்றியை தெரிவித்துக் கொண்டார். 

இந்த முறை வங்கத்தில் முதல்முறையாக தாமரை பூப்பதை அனைவரும்  காணப் போகிறீர்கள் என்பதற்கான அறிகுறிகள்தான் இவை என்றார், மம்தா பானர்ஜியின் ஆட்சி வன்முறை ஆட்சி, அதிகார மமதையில் அவர் வன்முறை ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார், இந்தத் தேர்தலில் வங்கத்தில் ஜனநாயகக் குரல் ஒலிக்கப்போகிறது. இந்தமுறை திர்ணாமுல் காங்கிரஸுக்கு மக்கள் முடிவு கட்டப் போகிறார்கள். இவர் அவர் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom