Type Here to Get Search Results !

ரூ.84,686 கோடி கடன் வாங்க இலக்கு.... நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்


தமிழகத்தின் நிதித் தேவைக்காக ரூ.84,686 கோடி கடன் வாங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தமிழக இடைக்கால பட்ஜெட்டில் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருப்பதாவது, 
தமிழக நிதித் தேவைகளுக்காக ரூ.84,686 கோடி கடன் வாங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தின் நிலுவைக் கடன் ரூ.5,70,108.29 கோடியாக இருக்கும். 

உற்பத்தி மதிப்பீட்டில் இது 26.69 சதவீதமாகும். 
தமிழகத்தின் கடன் அளவு 15வது நிதிக்குழு பரிந்துரைத்த இலக்கிற்குள் உள்ளதாக பட்ஜெட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.