அமெரிக்காவின் மிசெளரி மாகாணத்தைச் சேர்ந்தவர் லிசா மன்ட்கோமெர்ரி என்ற 52 பெண் 2004-ம் ஆண்டு 23 வயது கர்ப்பிணி பெண்ணை கொலை செய்து கர்ப்பிணியின் வயிற்றை கத்தியால் கீறி குழந்தையை வெளியே எடுத்தார்.கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
வழக்கில் மேற்கு மிசெளரி மாவட்ட கோர்ட் மரண தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து அவருக்கு விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் கடந்த 68 ஆண்டுகளுக்கு பின்னர் முதன்முறையாக பெண் குற்றவாளிக்கு அமெரிக்கா மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக கூறப்படுகிறது.