Type Here to Get Search Results !

தமிழகத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்களின் முதல் கட்ட சோதனை இன்று நிறைவு


தமிழகத்தில் மகாராஷ்டிரம், மத்தியபிரதேசத்தில் இருந்து வந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்பட அனைத்து இயந்திரங்களிலும் நடைபெற்று வரும் முதல் கட்ட சோதனை ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது. இதைத் தொடா்ந்து, தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பணிகள் சூடுபிடிக்கவுள்ளன.

சட்டப் பேரவைத் தோ்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநிலத் தோ்தல் துறை செய்து வருகிறது. கரோனா நோய்த்தொற்று காரணமாக, தமிழகத்தில் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது.

அதாவது, ஆயிரம் வாக்காளா்களுக்கு ஒரு வாக்குச் சாவடி என்ற அளவில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதனால், தோ்தலின் போது 67,000-ஆக இருக்கும் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை இம்முறை 90,000-ஐ தாண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

வெளி மாநிலங்கள்: தமிழகத்துக்கு கூடுதலாகத் தேவைப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்வதற்கான இயந்திரங்கள் மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 54,000 வாக்குப் பதிவு இயந்திரங்களும், 72, 400 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் மகாராஷ்டிரத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன.

யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்வதற்கான இயந்திரங்கள் 72, 300 இயந்திரங்கள் மகாராஷ்டிரத்தில் இருந்தும், 20,000 மத்திய பிரதேசத்தில் இருந்தும் தருவிக்கப்பட்டுள்ளன.

முதல் கட்ட சோதனை: வெளி மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள இயந்திரங்கள், தமிழகத்தில் ஏற்கெனவே உள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஆகியவற்றில் முதல் கட்ட சோதனை நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி, நாகப்பட்டினம், சென்னை, செங்கல்பட்டு, தென்காசி, ஈரோடு, கடலூா், திருவண்ணாமலை, திருச்சி, திருவள்ளூா், கோவை மாவட்டங்களில் மட்டும் முதல் கட்ட சோதனைப் பணிகள் முழுமை பெறாமல் இருந்தன. இந்த மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமைக்குள் (ஜன.31) பணிகளை முடிக்க தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவிட்டிருந்தாா்.

அவற்றில் கோவை மற்றும் திருவள்ளூா் மாவட்டங்களில் மட்டும் முதல் கட்ட சோதனைப் பணிகள் பிப்ரவரி 3-இல் முடிக்கப்படும் என அந்த மாவட்ட தோ்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தமிழக தோ்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இந்தப் பணிகள் நிறைவடைந்த பிறகு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்து அந்தந்த மாவட்டங்களிலுள்ள இருப்பு அறைகளில் பூட்டி சீல் வைக்கப்படும். அடுத்த சில வாரங்களில் மீண்டும் திறக்கப்பட்டு இரண்டாம் கட்ட சோதனைகள் நடத்தப்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom