Type Here to Get Search Results !

முதல்வர் வேட்பாளருக்கு முற்றுப்புள்ளி வைத்த அதிமுக அமைச்சர்...!


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முதல்வர் வேட்பாளர் யார்..? இதனால், அதிமுக - பாஜகவினர் இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுபற்றி தமிழக அமைச்சர் மாபா பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

மதுராந்தகத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  ‘தமிழகத்தில் அதிமுக முதல்வர் வேட்பாளர்  எடப்பாடி பழனிச்சாமிதான். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் யார் என்பதை பாஜக தான் முடிவு அறிவிக்கும் என வானதி சீனிவாசன் கூறியது’ பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. 

இதற்கு பதில் அளித்த மாபா பாண்டியராஜன், “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக ஒரு அங்கம். இந்த கூட்டணியில் இங்கே யார் முதல்வர் என்று முருகனோ அல்லது வானதி சீனிவாசனோ அறிவிக்க முடியாது. இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகத்துக்கு வருகை தரும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாதான் அறிவிப்பார்” என்று மாபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

AthibAn Tv

Top Post Ad

Below Post Ad

Ads Bottom