Type Here to Get Search Results !

ஸ்டெர்லைட் ஆலையை மூடியது அரசின் கொள்கை முடிவு : தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில்



ஸ்டெர்லைட் ஆலையை மூடியது அரசின் கொள்கை முடிவு என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.

வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஸ்டெர்லைட் ஆலை மூடிய பின்னர் நிலத்தடி நீரின் தரம் மேம்பட்டு, காற்று மாசு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட  தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு என்பது கொள்கை முடிவு என்றும், எனவே நிரந்தரமாக ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags