Type Here to Get Search Results !

பாஜக சார்பாக புதிய தொலைக்காட்சி? பின்னணியில் இருக்கும் மூவர் யார்?



தமிழக அரசியலை பொறுத்தமட்டில் ஆளும் கட்சியான அதிமுக தொடங்கி எதிர்க்கட்சியான திமுக, பாமக, தேமுதிக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, அமமுக என அனைத்து கட்சிகளும் தங்களுக்கு என்று பிரதானமாக 24 மணி நேர ஊடகம் ஒன்றிணை வைத்துள்ளன, இவற்றிற்கு பார்வையாளர்கள் இருக்கிறார்களோ இல்லையோ தங்கள் கட்சியின் செய்திகளை எடுத்து சொல்ல இந்த ஊடகங்கள் பயன்படுகின்றன.

இந்நிலையில் தமிழக பாஜக சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜகவிற்கு என்று ஊடகம் ஒன்றிணை ஏற்பாடு செய்தால், அது பிரச்சாரங்களை எடுத்து செல்லவும் தங்களுக்கு ஆதரவான கருத்துக்கள் எடுத்து சொல்லவும், பரப்பப்படும் போலி செய்திகளுக்கு பதிலடி கொடுக்கவும் பயன்படும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து டெல்லி தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் இதுவரை பாஜக சார்பில் எந்த மாநிலத்திலும் கட்சிக்கு என்று தனியாக ஊடகங்கள் தொடங்கியது இல்லை எனவே தமிழகத்தில் தொடங்குவது குறித்து முழுமையான ஆலோசனை செய்து அதன் பிறகு முடிவு எடுக்கலாம் என.டெல்லியில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

அதே நேரத்தில் 2021 தேர்தல் மற்றும் 2024 நாடாளுமன்ற பொது தேர்தல் ஆகியவற்றை கணக்கில் கொண்டு தற்போது இருக்கும் ஊடகங்களில் ஒன்றை தங்களது காம்பைனில் பயன்படுத்தி கொள்ள பாஜக ஒப்பந்தம் செய்யலாம் எனவும் இதன் பின்னணியில் தமிழகத்தை சேர்ந்த முன்னணி பத்திரிகையாளர் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

அவரை தவிர்த்து பாஜக வியூகம் வகுக்கும் குழுவில் இருந்து ஒருவரும் , முன்னாள் IIT பேராசிரியர் தலைமையில் ஒரு குழுவும் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது, இதன் மூலம் பாஜக தமிழகத்தில் தங்களது கருத்துக்களை எடுத்து செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

கேரளாவில் ஜனம் தொலைக்காட்சி இருப்பது பாஜகவின் வளர்ச்சிக்கு உதவுகிறது, அதே போல் மற்ற மாநிலங்களிலும் பல சேனல்கள் பாஜக கருத்தை எடுத்து சொல்ல இருக்கின்றன, அதேபோல் தமிழகத்தில் ஒரு ஊடகம் உருவானால் மட்டுமே மாற்றம் விரைவில் அமையும் என்பதில் சந்தேகமில்லை.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom