Type Here to Get Search Results !

சிறு ஒழுங்கை கடைபிடித்தால் 'பிட்' ஆகலாம்: பிரதமர் மோடி அறிவுரை



அனைவரும் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக பிரதமர் மோடி கடந்த ஆண்டு, 'பிட்' இந்தியா இயக்கத்தை துவக்கி வைத்தார். இன்று (செப்., 24) அதன் முதலாம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி காணொளி மூலம் விளையாட்டு பிரபலங்கள், நடிகர்கள், உடற்பயிற்சி நிபுணர்களுடன் கலந்துரையாடினார்.

அவர்களிடம் பிரதமர் மோடி பேசியதாவது:

பலர் நினைப்பது போல் 'பிட்'டாக மாறுவது கடினம் கிடையாது. அதற்கு ஒரு சிறிய ஒழுங்கு தேவை. ஒருவருக்கொருவர் ஊக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி என்ற குறிக்கோளை வைத்துக்கொள்ளுங்கள். அப்பொது டென்னிஸ், கபடி, பேட்மின்டன் போன்றவற்றை விளையாடுங்கள். சிறு ஒழுங்கை கடைபிடித்தால் 'பிட்' ஆகலாம். 'பிட்' இந்தியா என்றால் 'ஹிட்' இந்தியா என அர்த்தம். இதனை தீவிரமாக எடுத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

ஐ.பி.எல்., போட்டிக்காக துபாயில் உள்ள இந்திய கிரிக்கெட் கேப்டன் கோஹ்லி இந்நிகழ்ச்சியில் பேசுகையில், 'உடற்தகுதிக்கு முன்னுரிமை இருக்க வேண்டும். முன்னர் என் விளையாட்டை மேம்படுத்த உடற்தகுதி குறித்து கவனம் செலுத்தினேன். ஆனால் இப்போது உடற்பயிற்சி தான் முன்னுரிமை என உணர்ந்துள்ளேன். பரபரப்பான இன்றைய வாழ்க்கையில் உடற்பயிற்சி இல்லாவிட்டால் பின் தங்கிவிடுவோம்' என்றார்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom