Type Here to Get Search Results !

சரியான நேரத்தில் அண்ணாமலை களத்தில் இறங்கி இருப்பது திராவிட அரசியல் வாதிகள் அலறி வருகிறார்கள்




பாஜகவில் சமீபத்தில் இணைந்த முன்னாள் IPS அதிகாரி அண்ணாமலையை பாஜக வினர் வரவேற்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர், அதே நேரத்தில் பாஜகவிற்கு எதிர் சித்தாந்தம் கொண்ட நபர்கள் அரசியல் வாதிகள் உள்ளிட்டோர் அண்ணாமலை வருகையை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, அண்ணாமலை முன்னாள் ips அதிகாரி, அவர் தன் பணியை நேர்மையாக செய்துள்ளார், அதோடு அரசியல்வாதியாக மாறிய பின்னர், ஊடகங்களை நேரடியாக திறம்பட சமாளிக்கிறார், தன்னை விமர்சனம் செய்த சீமான் போன்றவர்களுக்கு ட்விட்டரில் நேரடியாக அதே வார்த்தையில் பதிலடி கொடுத்துள்ளார்.

இதனால் எங்கு அண்ணாமலை மக்கள் மத்தியில் இடம்பிடித்து விடுவாரோ என்ற அச்சத்தில் பலரும் அண்ணாமலையை விமர்சனம் என்ற பெயரில் கடுமையாக வசைபாடி வருகின்றனர், இந்த நிலையில் அண்ணாமலை, பாஜக தேசிய பொது செயலாளர் ராம் மாதாவை சந்தித்தது, ஊடகங்களில் பரபரப்பாக பேசு பொருளாக மாறியுள்ளது.

காஷ்மீர் மாநிலம் மற்றும் அசாம், திரிபுரா, போன்ற வடகிழக்கு மாநிலங்களுக்கு பொறுப்பாளராக இருப்பவர் ராம் மாதவ், பாஜகவில் செயல்பட கூடிய முக்கிய தலைவர்களில் ஒருவர், எங்கெல்லாம் பாஜக வளர்வதற்கு சவாலாக இருக்கிறதோ அங்கெல்லாம் முன் நின்று பணியாற்றி வெற்றிகளை பெற்று கொடுக்க கூடியவர், இந்த நிலையில் அண்ணாமலை IPS உடனான சந்திப்பில் ரம்மாதவ் பிரதமருக்கு ஒரு உறுதிமொழி அளித்துள்ளாராம்.

இந்தியாவில் மிகவும் முன்னிறுத்த கூடிய பாஜகவின் முகமாக விரைவில் அண்ணாமலை வருவார் என்றும் அவரது தொலைநோக்கு பார்வைகள், அரசியல் வாதிகளை கணிக்கும் விதம் அருமையாக இருப்பதாக கூறியிருக்கிறாராம் எனவே இனி வரும் காலங்களில் அண்ணாமலையின் அதிரடி கூட்டங்கள், பேட்டிகள் ஆகியவற்றின் மூலம் அண்ணாமலை தமிழர்களின் மனதில் இடம்பிடிப்பார் என்று உறுதி மொழியை கொடுத்துள்ளாராம்.


எங்கு அண்ணாமலை வளர்ச்சி அடைந்தால் அது திமுக மற்றும் திராவிட இயக்கங்களுக்கு எதிராக முடியும் என்ற காரணத்தால் இப்போதே வலுவாக அண்ணாமலையை விமர்சனம் என்ற பெயரில் வீழ்த்த முழு நேர பணியாளர்களை நியமித்து களத்தில் இறங்கி இருக்கிறதாம் 380 கோடி அணி, அதன் ஒரு பிரிவுதான் அண்ணாமலை குறித்து விமர்சனம் என்ற பெயரில் தினமும் அலறி வருகிறார்களாம் !!

2024 நாடாளுமன்ற பொது தேர்தல் மற்றும் 2026 தமிழக சட்டமன்ற பொது தேர்தல் ஆகியவற்றை குறிவைத்து சரியான நேரத்தில் அண்ணாமலை களத்தில் இறங்கி இருப்பது திராவிட அரசியல் வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்க போகிறது !!

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom