Type Here to Get Search Results !

இயற்கையை காப்பதற்காகவே விழாக்கள் கொண்டாடப்படுகின்றன : மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் மான்கி பாத் நிகழ்ச்சி தமிழாக்கம்

பிரதமர் மோடியின் மான்கி பாத் நிகழ்ச்சி தமிழாக்கம்

Posted by AthibAn Tv on Sunday, August 30, 2020



இயற்கையை காப்பதற்காகவே விழாக்கள் கொண்டாடப்படுகின்றன, புதிய கல்வி கொள்கை, நாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த போகிறது
 என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மன் கி பாத் நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது:

*ஓணம் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச பண்டிகையாக மாறிவிட்டது.

*அமெரிக்க ஐரோப்பிய அரபு நாடுகளில் கூட ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது

*இயற்கையை காப்பதற்காகவே விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

*நாட்டின் ஒவ்வொரு நிகழ்விலும் பொறுமை எளிமை காணப்படுகிறது.

*விநாயகர் சதுர்த்தியின்போது இயற்கை முறையில் செய்த சிலைகளை பல இடங்களில் காண முடிந்தது

*பண்டிகை காலம் களைகட்டதொடங்கியுள்ளதால் மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்

*அதிக எச்சரிக்கையுடன் இந்த பண்டிகைகளை மக்கள் கொண்டாட வேண்டும்

*விவசாயிகளுக்கும் உணவு அளிப்பவர்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.

*நெல் மற்றும் கோதுமை உள்ளிட்ட தானியங்கள் இந்த ஆண்டு அதிக பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது.

*குழந்தைகள் ஒன்று சேர்ந்து விளையாடும் போது ஒற்றுமை வளர்கிறது.

*இந்த முயற்சி நல்ல கட்டமைப்பை உருவாக்கி உள்ளது.

*விளையாட்டு என்பது வெறும் பொழுது போக்கு அல்ல

*தேசிய கல்விக் கொள்கையில் கூட இது பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.

*நமது நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளை கணிணிமயமாக்குவது சிறப்பாக இருக்கும்

*நமது பழங்கால விளையாட்டுகளை புதிய டிஜிட்டல் கேம்களாக உருவாக்க வேண்டும்

*குழந்தைகளின் சிந்திக்கும் திறன் வளர்ந்துள்ளது.

*5 மாதங்கள் சிறுவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

*உள்நாட்டு விளையாட்டு பொம்மைகளுக்கு நல்ல பாரம்பரியம் உள்ளது.

*தமிழகத்தில் பொம்மைகள் செய்யும் மையமாக தஞ்சாவூர் விளங்குகிறது

*கடந்த காலத்தை நினைவூட்டுவதும், எதிர்காலத்தை பிரகாசமாக்குவதும் பொம்மைகள்.

*இந்தியாவில் தயாரிக்கப்படும் விளையாட்டு பொருட்கள் ஒற்றுமையை பறைசாற்றுகிறது.

*விளையாட்டு பொம்மைகள் என்பது குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் இருக்க வேண்டும்.

*பொம்மைகள் உருவாக்குவதை புதிய கல்வி கொள்கையில் ஒரு பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது

*இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி யெ்ய வேண்டும்

*உள்நாட்டு விளையாட்டு பொருட்களை வாங்க ஊக்கவிக்க வேண்டும்

*நாடு பல்வேறு விதமான சவால்களை சந்தித்து வருகிறது.

*வருகிற செப்., மாதம் ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்கப்பட உள்ளது

*செப்., ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. அதற்கு மக்கள் ஒத்துழைப்பு தேவை

*புதிய கல்வி கொள்கை இந்தியாவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த போகிறது

*கொரோனா காலத்தில் இந்திய ஆசிரியர்கள் பெரும் சவாலான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

*மாணவர்கள் ஆசிரியர்கள் இணைந்து பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு பிரதமர் பேசினார்.

இந்திய ரக நாய்களை வளருங்கள்

பிரதமர் மேலும் பேசியதாவது: இந்திய ரக நாய்கள் மிக சிறப்பாக செயல்படுகின்றன என்று எனக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய ரக நாய்களில் முதோல் ஹவுண்ட்கள், ஹிமாச்சலில் ஹவுண்டுகள் இருக்கின்றன. இவை மிகவும் அருமையான ரகங்கள். ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை போன்ற மிக அருமையான இந்திய ரக நாய்கள் உண்டு. இவற்றை பராமரிப்பதில் அதிக செலவு பிடிப்பதில்லை. இவை இந்திய சூழலுக்கு ஏற்றவாறு இருக்கின்றன.

நமது பாதுகாப்பு படையினர் இந்த இந்தியரக நாய்களை தங்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தி வருகிறார்கள். கடந்த சில காலமாகவே, ராணுவம், மத்திய தொழிலக பாதுகாப்பு படை தேசிய பாதுகாப்பு குழு ஆகியோர் முதோல் ஹவுண்ட் ரக நாய்களுக்கு பயிற்சி கொடுத்து அவற்றை நாய் படைப்பிரிவில் இணைந்திருக்கிறார்கள். மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் கோம்பை ரக நாயகளை சேர்த்துள்ளார்கள்.

இந்திய விவசாய ஆய்வுக்கழகமும், இந்திய ரக நாய்கள் மீது ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது. அதாவது இந்திய ரக நாய்களை மேலும் சிறப்பானதாக ஆக்குவதும் பயனுள்ளதாக ஆக்குவதும் தான் இதன் நோக்கம். நீங்கள் இணையத்தில் இவற்றை தேடி பாருங்கள். இவற்றை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இவற்றின் நேர்த்தி குணங்கள் ஆகியவற்றை பார்த்து உங்களுக்கு ஆச்சர்ய உணர்வு மேலிடும். அடுத்த முறை ந ாய் வளர்ப்பு பற்றி நீங்கள் எண்ணமிடும் போது கண்டிப்பாக இவற்றில் ஏதாவது ஒரு இந்திய ரக நாயை நீங்கள் வீட்டுக்கு கொண்டு செல்லுங்கள். தற்சார்பு பாரதம், மக்களின் மனங்களில் மந்திரமாக ஒலிக்கும் போது, எந்த ஒரு துறையும் இதிலிருந்து விடுபட முடியாது. இவ்வாறு பிரதமர் பேசினார் .
பிரதமர் மோடியின் மான்கி பாத் நிகழ்ச்சி தமிழாக்கம்

பிரதமர் மோடியின் மான்கி பாத் நிகழ்ச்சி தமிழாக்கம்

Posted by AthibAn Tv on Sunday, August 30, 2020

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom