Type Here to Get Search Results !

இறுதி பருவத் தேர்வு தவிர பிற தேர்வுகள் எழுதுவதில் இருந்து விலக்கு: முதல்வர் அறிவிப்பு




தமிழகத்தில் கல்லூரி இறுதி தேர்வு தவிர பிற பருவ பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 
மேலும் தேர்வு கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்கு யூஜிசி, ஏஐசிடிஇ வழிகாட்டுதல்படி மதிப்பெண் வழங்கப்படும் எனவும், உயர்மட்ட குழுவின் பரிந்துரை அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'கொரோனா நோய் தொற்று காரணமாக உயிர்கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலும், பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி மதிப்பெண்கள் வழங்கி,

*முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பில் பயிலும் மாணவர்களுக்கும் மற்றும் பலவகை தொழில்நுட்பப பட்டயப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கும்,

*முதுகலைப் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும்,

*இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும்.

*முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும்,

*அதே போன்று எம்சிஏ முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும்,

இந்த பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து, அடுத்த கல்வி ஆண்டிற்கு செல்ல நான் உத்தரவிட்டு இருந்தேன். அதன் அடிப்படையில், உயர்கல்வித்துறை விரிவான வழிகாட்டுதல்களை வழங்கி அரசாணை வெளியிட்டது. 

தற்போது, மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் நலன் கருதி, தமிழக அரசால், அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரை அடிப்படையில் இறுதி பருவத் தேர்வுகளைத் தவிர பிற பருவப்பாடங்களின் தேர்வுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணாக்கர்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதலின் படி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom