Type Here to Get Search Results !

'என் மகள் இவாங்கா டிரம்ப் தான் தேர்தலில் போட்டியிட தகுதியானவர்' டிரம்ப் தெரிவித்தார்




 'என் மகள் இவாங்கா டிரம்ப் தான் தேர்தலில் போட்டியிட தகுதியானவர்' என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி நியூ ஹாம்ஸ்பியரில் வெள்ளியன்று நடந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: ' கமலா ஹாரிஸ் தேர்தலில் துணை அதிபராக போடியிட தகுதியில்லாதவர். அதிபராக ஒரு பெண் போட்டியிடுவதை நான் ஏற்கிறேன். ஆனால் என் மகள் இவாங்கா டிரம்ப் தான் சிறந்த வேட்பாளராக இருப்பார்.

கமலா ஹாரிஸுக்கு மக்கள் ஆதரவு இல்லை. ஜோ பிடன் அறிவிப்புக்கு பிறகு தான் அவருடைய அரசியல் வாழ்க்கை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜமைக்காவைச் சேர்ந்த அப்பாவுக்கும் இந்திய தாய்க்கும் பிறந்த கமலா ஹாரிஸ் அமெரிக்க தேர்தலில் போட்டியிட தேர்வு செய்யப்பட்ட முதல் இந்திய மற்றும் கருப்பின பெண். இவருடைய செல்வாக்கு அமெரிக்காவில் குறைந்து வருகிறது' இவ்வாறு டிரம்ப் பேசினார்.

இந்நிலையில் கமலா ஹாரிஸ், 'அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிபருக்கான கடமையாற்ற தவறிவிட்டார். மக்களை தொற்றிலிருந்து காப்பாற்ற தவறிவிட்டார்' இவ்வாறு அவர் கூறினார்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom