Type Here to Get Search Results !

2 க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்டவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட அனுமதியில்லை : உ.பி., முதலமைச்சர் நடவடிக்கை!


உ.பி.,யில் மக்கள் தொகை கட்டுப்படுத்துவதன் மீதான பேச்சுக்கள் சமீப நாட்களாக எழுந்துள்ளன. மக்கள் தொகை அதிகரிப்பால் உ.பி.,யின் சிறுபான்மையினர், பெரும்பான்மையினராகி வருவதாக அகில இந்திய சாதுக்கள் சபையின் தலைவர் மஹந்த் நரேந்திர கிரி கருத்து கூறி இருந்தார்.

இப்பிரச்சனையில் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய இணை அமைச்சரும் உ.பி., - பா.ஜ., தலைவருமான சஞ்சீவ் பலியானும் முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், பா.ஜ., ஆளும் உ.பி., அரசும் மக்கள் தொகை கட்டுப்படுத்துவதில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.

இதற்காக, அங்கு இவ்வருட இறுதியில் வரவிருக்கும் பஞ்சாயத்து தேர்தலில் சில முக்கிய மாற்றங்கள் செய்யத் திட்டமிட்டிருக்கிறது. அதன்படி, இரண்டு குழந்தைகளுக்கும் அதிகம் பெற்றவர்களை தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக அம்மாநிலத்தின் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் திருத்தம் செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக நேற்று உ.பி., மாநிலப் பஞ்சாயத்து ராஜ் துறையின் அமைச்சர் பூபேந்தரா சிங் சவுத்ரி, முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த தேர்தலில் சுமார் 30 லட்சம் பேர் போட்டியிடுவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், அதில் இரண்டு குழந்தைகளுக்கும் அதிகமாகப் பெற்றவர்கள் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டால் பலன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடியின் மான்கி பாத் நிகழ்ச்சி தமிழாக்கம்

பிரதமர் மோடியின் மான்கி பாத் நிகழ்ச்சி தமிழாக்கம்

Posted by AthibAn Tv on Sunday, August 30, 2020