Type Here to Get Search Results !

“ஹைட்ராக்சிக்ளோரோக்வின்“ பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு - மீண்டும் டிரம்ப் ஆதரவு..!



பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையிலும், 'ஹைட்ராக்சிக்ளோரோக்வின்' மருந்துக்கு ஆதரவாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார்.'கொரோனா' வைரஸ் பாதிப்பு அமெரிக்காவில் அதிகரித்தபோது, 'மலேரியாவுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்சிக்ளோரோக்வின் மருந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிறந்த பலனை அளிக்கிறது' என, டிரம்ப் கூறியிருந்தார். பக்க விளைவுகள்இதற்காக, இந்தியாவிடம் இருந்து இந்த மருந்தையும் அவர் வாங்கியுள்ளார்.

ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த, புகழ்பெற்ற மருத்துவ நிபுணர் டாக்டர் ஆன்டனி பாசி இதை நிராகரித்தார். எப்.டி.ஏ., எனப்படும் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பும், இந்த மருந்தை ஆதரிக்கவில்லை.கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு, இந்த மருந்தை அளிக்கும்போது, மாரடைப்பு உட்பட பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக மருத்துவ ஆராய்ச்சிகளில் தெரிய வந்தது.அதனால், இந்த மருந்தை பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.ஆனால், ஹைட்ராக்சிக்ளோரோக்வின் மருந்துக்கு ஆதரவாக, டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார். இந்த மருந்து நல்ல பலனை தருவதாக, சில டாக்டர்கள் கூறியதாக, 'வீடியோ' ஒன்றை, சமூக வலைதளங்களில் டிரம்ப் சமீபத்தில் வெளியிட்டார்.இது, 'உண்மைக்கு மாறான செய்தி' என, டிரம்ப் வெளியிட்ட செய்தியை, 'டுவிட்டர்' உள்ளிட்ட சமூக வலைதளங்கள் நீக்கியுள்ளன. இருந்தாலும், இந்த மருந்துக்கு ஆதரவாக, டிரம்ப் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார். அரசியலே காரணம்அதில் அவர் கூறியுள்ளதாவது:கொரோனா வைரஸ் பாதிப்பு துவக்க கட்டத்தில் உள்ளவர்களுக்கு, ஹைட்ராக்சிக்ளோரோக்வின் மருந்து சிறந்த பலனை அளிக்கிறது. நானும் இந்த மருந்தை, 14 நாட்கள் எடுத்துக் கொண்டேன். நான் நன்றாக உள்ளேன்.

இந்த மருந்து நீண்டகாலமாக உள்ளது. மலேரியா உள்ளிட்டவற்றுக்கு நல்ல பலனை அளித்துள்ளது. இந்த மருந்தால் பாதிப்பு ஏற்பட்டதாக, இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை.கொரோனாவுக்கு இந்த மருந்தை அளிக்கலாம் என, பல டாக்டர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதற்கு அரசியலே காரணம் என்று நினைக்கிறேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.பிரசாரத்தால் சிக்கிய டிரம்ப்அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 3ல் நடக்க உள்ளது. குடியரசு கட்சி சார்பில், டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார்.

ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிட உள்ளார்.சமீபத்தில் நடந்த பிரசாரத்தின் போது, 'வீடியோ' ஒன்றை டிரம்ப் வெளியிட்டார். அதில், ஒரு பெண்ணின் வீட்டுக்குள் திருடர்கள் நுழைகின்றனர். அந்த பெண், போலீஸ் உதவி கேட்டு, தொலைபேசியில் பேசுகிறார். ஆனால் அதில், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட செய்தி மட்டுமே வருகிறது. அந்த பெண்ணுக்கு உதவி கிடைக்கவில்லை.இந்த வீடியோவை காண்பித்து, ஜோ பிடன் ஆட்சிக்கு வந்தால், இது தான் நிலை என்று டிரம்ப் பேசியுள்ளார்.ஆனால், இது அவருக்கு எதிராக திரும்பியுள்ளது. 'தற்போது டிரம்பின் ஆட்சி நடக்கிறது. ஒரு பெண்ணுக்கு போலீஸ் உதவி கிடைக்காததற்கும், ஜோ பிடனுக்கும் என்ன தொடர்பு உள்ளது' என, விமர்சனங்கள் எழுந்துள்ளன.


Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom