Type Here to Get Search Results !

பிரதமரின் முடிவுகளுக்கு திமுக ஆதரவளிக்கும் என தெரிவித்த ஸ்டாலினை பாஜ.க பாராட்டு

திமுகவுக்கு திடீர் நெருக்கடி ...

இந்திய வீரர்கள் மீதான சீன ராணுவத்தின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, பிரதமரின் முடிவுகளுக்கு திமுக ஆதரவளிக்கும் என தெரிவித்த ஸ்டாலினை பாஜ.க பாராட்டியுள்ளது.

சமீபத்தில், பிரதமர் தலைமையில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சீன பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது. சோனியா, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். 'சீன விவகாரத்தில் பிரதமர் எடுக்கும் முடிவுகளுக்கு, தி.மு.க., ஆதரவு அளிக்கும்' என, ஸ்டாலின் பேசினார். ஆனால், இதே கூட்டத்தில் பேசிய சோனியா, மத்திய அரசை விமர்சித்தார். மோடிக்கு ஆதரவாக ஸ்டாலின் பேசியது, காங்கிரசில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழக பாஜ., ஏற்பாடு செய்த காணொலி பேரணியில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலர் முரளிதரராவ் பேசியதாவது: இந்திய ராணுவ வீரர்கள் இறப்புக்கு காரணமான சீன அரசுக்கு கண்டனம் தெரிவித்த ஸ்டாலினை பாராட்டுகிறேன். ஆனால், சீன ஆதரவு நிலையில் உள்ள ராகுலை ஸ்டாலின் கண்டிக்கவில்லை. சீனாவுக்கு ஆதரவாக உண்மையை திரித்துக்கூறி மக்களை குழப்பும் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும். ராஜிவ் அறக்கட்டளை சீனாவுடன் என்ன ஒப்பந்தம் போட்டது, இந்த அறக்கட்டளைக்கு சீனா ஏன் நன்கொடை அளித்தது என்ற கேள்விகளுக்கு ராகுலிடம் இருந்து பதில் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.