Type Here to Get Search Results !

பாகிஸ்தானில் பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்

Gunmen storm into stock exchange in Pakistan's Karachi, six dead ...

பாகிஸ்தானில் பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், போலீசாருக்கும், பயங்கரவாதிகளுக்கும் நடந்த தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் உள்ள மெயின் கேட்டில் பயங்கரவாதிகள், பயங்கர ஆயுதங்கள் மற்றும் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். பின்னர், துப்பாக்கியால் சுட்டபடி பங்குச்சந்தை உள்ளே நுழைய முயன்றனர். இதனால், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பயங்கரவாதிகள் நோக்கி துப்பாக்கியால் சுட்டு பதில் தாக்குதல் நடத்தினர்.

அலுவலக கட்டடத்தில் இருந்த அலுவலக பணியாளர்கள் அனைவரையும் போலீசார் வெளியேற்றினர். பின்னர் அப்பகுதி முழுவதையும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டனர். போலீசாருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் சுட்டதில், பொதுமக்கள் தரப்பில் 2 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர்.