
வாடிக்கையாளர்களின் சேவைக்காக இந்தியாவில் 20,000 பேரை பணியமர்த்த உள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்ட அமேசான் நிறுவனம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஆன்லைனில் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. கொரோனா பரவலையடுத்து கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கால் தற்போது பல்வேறு நாடுகளில் ஆன்லைன் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் சேவையை அதிகரிக்கும் வகையில் தற்காலிக வேலைவாய்ப்பை இந்நிறுவனம் வழங்குகிறது.
இந்தியாவில் உள்ள ஐதராபாத், புனே, கோவை, நொய்டா, கோல்கட்டா, ஜெய்பூர் உள்ளிட்ட 11 நகரங்களில் ஆறு மாத காலத்திற்கு தற்காலிகமாக 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பினை அமேசான் வழங்க உள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இவர்கள் 12ம் வகுப்பு படித்திருப்பதுடன் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய ஏதாவது ஒரு மொழியை சரளமாகச் பேசத் தெரிந்திருக்க வேண்டும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.