Type Here to Get Search Results !

'எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கும் நோக்கில், பாகிஸ்தான் இப்படி பொய் சொல்கிறது'

இந்தியாதான் தாக்குதலே நடத்தலியே ...

 'எல்லைக் கட்டுப்பாடு கோட்டை கடந்து, பாக்., பகுதிக்குள் ஊருவிய, இந்தியாவின் ஆளில்லா உளவு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தினோம்' என, அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு, கடந்த ஆண்டு, பிப்பரவரி, 14ல் நடத்திய தற்கொலை படை தாக்குதலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த, 40 வீரர்கள் இறந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் பகுதிக்குள் சென்ற நம் விமானப்படை விமானங்கள், பயங்கரவாத பயிற்சி முகாம்களை குண்டுகள் வீசி அழித்தன.

இந்திய விமானப்படை விமானி, 'விங் கமாண்டர்' அபிநந்தனை, பாகிஸ்தான் ராணுவம் சிறை பிடித்தது. இந்தியா கொடுத்த நெருக்கடிக்குப் பயந்து, பாக்., அரசு அபினந்தனை, இரண்டு நாட்களில் விடுவித்தது. அது முதல், இந்திய - பாக்., எல்லையில் பதற்றம் தொடர்கிறது. எல்லைக் கட்டுபாடு கோடு பகுதியில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாக்., ராணுவம் தாக்குதல் நடத்துவதும், இந்திய ராணுவம் விரட்டியடிப்பதும், அடிக்கடி நடக்கும் சம்பவமாகிவிட்டது.

இந்நிலையில், மூன்று நாட்களுக்கு முன், உளவு பார்க்க, தங்கள் பகுதியில் ஊருவிய இந்தியாவின் ஆளில்லா ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்தது. இதை இந்தியா மறுத்தது. நேற்று முன்தினமும், எல்லைக் கட்டுபாடு கோட்டை கடந்து, பாக்., பகுதியில், 700 மீட்டர் துாரம், இந்திய ஆளில்லா உளவு ஹெலிகாப்டர் ஊடுருவியதாகவும், அதை சுட்டு வீழ்த்தியதாகவும், பாக்., ராணுவம் தெரிவித்துள்ளது. இதையும் இந்தியா மறுத்துள்ளது.

'எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கும் நோக்கில், பாகிஸ்தான் இப்படி பொய் சொல்கிறது' என, நம் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom