
இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதற்கு பிரதமர் மோடியின் செயல்பாடே காரணம் என பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் நட்டா கூறியதாவது: பிரதமர் மோடி முன்னணியில் நின்று அரசை சிறப்பாக வழிநடத்தி செல்கிறார். கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, கடந்த 6 ஆண்டுகளில் நாடு மேம்பாடு அடைய சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் தலைமையின்கீழ் சுயசார்பு பாரதத்தை நோக்கி இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருப்பதற்கு மோடியின் செயல்பாடே காரணம்.
ராகுலுக்கு புரிதல் இல்லை
ராகுலுக்கு கொரோனா குறித்து சிறிதளவு புரிதல் மட்டுமே உள்ளது. கொரோனாவிலும் அவர் அரசியல் செய்து வருகிறார். கடந்த ஓராண்டில் மோடியின் ஆட்சியில் பல தைரியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.