தமிழகத்தில் புதிதாக 817 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தமிழகத்தில் புதிதாக 817 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 558 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 18,545 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 567 பேர் டிஸ்சார்ஜ் மொத்தம் எண்ணிக்கை 9909 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 8,500 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தமுள்ள 70 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று மட்டும் 11,231 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய பாதிப்புகளில் ஆண்கள் 508 பேர், பெண்கள் 309 பேர். மொத்த பாதிப்பில் 12 வயதுக்குள் உள்ளவர்கள் 1,122 பேர், 13 முதல் 60 வயதுக்குள் உள்ளவர்கள் 15,796 பேர், 60 வயதை கடந்தவர்கள் 1,627 பேர் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.