பங்குச் சந்தையில் LIC குழப்பம் வேண்டாம் LIC தனியார்மயம் ஆகவில்லை உண்மை ஆதாரம்


LIC பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய அரசு முடிவு, பங்குச் சந்தையில் LIC நிறுவனம் பட்டியலிடப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.

குழம்ப வேண்டாம்.

STATE BANK OF INDIA, ONGC, INDIAN BANK, BHEL, SAIL&GAIL போன்ற அரசு நிறுவனங்கள் மாதிரி LIC யும் பங்கு வெளியிடுகிறது.

நீங்களும் (பொதுமக்களும் ), ஒரு முதலீட்டாளராக LIC  யில்  பங்குகள் வாங்கி பயன் பெறலாம்.

நிர்வாகம் LIC யின் வசமே இருக்கும்.லாபத்தில் பங்குதாரருக்கு ஈவுத்தொகை கிடைக்கும்.

தற்போது எல்.ஐ.சி யின் லாபம், பாலிசிதாரர்களுக்கு 95 சதவீதமும், 5 கோடி முதலீடு செய்த மத்திய அரசுக்கு 5 சதவீதமும் பிரித்து தரப்படுகிறது.

இன்றைய பட்ஜெட் அறிவிப்பின்படி மத்திய அரசு தனது 5% பங்கை விற்கப் போவதாக நிதி அமைச்சர் தனது உரையில் சொல்லி உள்ளார்.

ஆகையால், பாலிசிதாரர்களோ, முகவர்களோ இதனால் பயப்படத் தேவையில்லை.


எல்.ஐ.சி யின் லாபத்தில் வழக்கம் போல் 95% பாலிசிதாரர்களின் காப்புத்தொகைக்கு தகுந்தபடி போனசாக வழங்கப்படும்.

மத்திய அரசுக்கு வழங்க வேண்டிய 5% லாபப்பங்கில் ஒருப் பகுதி தனியாருக்கு வழங்கப்படும்.

புரிதலின்றி பரப்பப்படும் செய்திகளை நம்ப வேண்டாம்.

Post a comment

0 Comments