கருணாநிதி மறைவுக்கு பின் திமுக முடிவுக்கு வந்துவிட்டதாக நினைக்கிறேன்: பொன்னார் பேட்டி

கருணாநிதி மறைவுக்கு பின் திமுக  முடிவுக்கு வந்துவிட்டதாக நினைக்கிறேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னார் பேட்டியளித்துள்ளார்.
கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில்  முன்னாள் மத்திய  அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், '1998 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய அத்வானி வரும் போது  கோவையில் குண்டு வெடிப்பு நடந்து மிகப்பெரிய உயிர் சேதம் நடைபெற்றது. குண்டு வெடிப்பில் பலியான அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கோவை மாவட்ட பாஜக சார்பில்  கோவையில்  பிப்ரவரி 14 ஆம் தேதி அஞ்சலிக் கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தின் நோக்கம், இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெற கூடாது என்பதை வலியுறுத்துவதாகும்.
தற்போது கன்னியாகுமரியில் சோதனைச் சாவடியில் ஒரு காவலர் பலியாகியிருக்கிறார். தமிழக அரசு பாதுகாப்பு  நடவடிக்கைகள் எடுத்தாலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது..இது தவிர்க்க பட வேண்டும்.
பாரளுமன்ற தேர்தலில் அதிக இடங்களைக் பிடித்துள்ளோம்.அதற்கு காரணம் மோடி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். தில்லி தேர்தல் நிலவரத்தை பொறுத்தவரை  இதற்கு முன்பு இல்லாத வகையில் அதிக வாக்குகளையும் ,அதிக தொகுதிகளையும் பெற்று இருக்கிறோம்.
தில்லியில் நடக்கின்ற போராட்டம் நேற்று முடிவு வந்துள்ளதாக நான் கேள்விப்பட்டேன். இது எந்த ஊடகத்திலும் வரவில்லை. எனவே இது தேர்தலுக்காக நடைபெற்ற போராட்டம் என்பது போல் தோன்றுகிறது.
தில்லியில் நடக்கின்ற போராட்டம் போல் தான் தமிழகத்திலும் நடக்கிவிருக்கிறது. வரும் தேர்தலிலும் தமிழகத்திலும் இது போன்ற  போராட்டங்கள் வரும் என்று நினைக்கிறேன்..
திமுக கருணாந்தி மறைவுக்கு பின் முடிவுக்கு வந்துவிட்டதாக நினைக்கிறேன்.
விஜய்யின் சூட்டிங் நடைபெற கூடாது என்று சொல்லி நாங்கள் போராடவில்லை. பாதுகாக்கப்பட்ட இடத்தில் எப்படி சூட்டிங் நடக்கும் என்பதே எங்களது கேள்வி. எங்களுக்கும் விஜய்க்கும் எந்த பகையுமில்லை.  தனி அதிகாரம் படைத்த அந்த நிறுவனம் தான் சூட்டிங்கிற்க்கு அனுமதி கொடுத்துள்ளது தவறு. ஏதாவது பிரச்சனை வந்தால் அங்கு வேலை செய்யவர்களுக்கு தான் பாதிப்பு.
பிரசாந்த் கிஷோர் வெற்றி மட்டுமல்ல தோல்வியும் அடைந்துள்ளார்.  தில்லி தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு காங்கிரஸ் கட்சியினர் முக்காடு போட்டிருக்கின்றனர். ஆனால் இதனை மூர்க்கத்தனம் என்று பா.சிதம்பரம் சொல்லிதிருக்கிறார்.
விவசாயத்தைப் பாதுகாக்க வேளாண் மண்டலமாக அறிவித்த முதல்வருக்கு நெஞ்சாந்த நன்றி. ஆனால் அங்கு புதிய திட்டங்கள் வருவது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்யும். ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்கள் ஏற்கனவே அனுமதி கொடுக்கப்பட்டவை. ஏற்கனவே அங்கு செயல்படும்  திட்டங்கள் பற்றி மக்கள் தான் சிந்தித்து பார்க்க வேண்டும். அங்கு செயல்படும் சில திட்டங்கள் பற்றியும் அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.
50 ஆண்டுகளுக்கு பிறகு இடது சாரிகள் எப்படி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்கள் என்று பார்க்கலாம். இவ்வளவு நாள் சுரண்டி பிழைப்பு நடத்தினார்கள்.ஆட்சியில் இருக்கும் போது எப்படி இவர்கள் தாக்கல் செய்தார்கள் என்று அனைவருக்கும் தெரியும்.
வில்சன் கொலை என்பது காவல்துறைக்கு விடுவிக்கப்பட்ட ஒரு சவால். காவல்துறையை எங்களால் அழிக்க முடியும் என்று நினைக்கிறார்கள்.எச்சரிக்கையுடன் நாம் இருக்க வேண்டும் என்றார்.

Post a comment

0 Comments