திமுகவை கிண்டல் அடித்த ராமதாஸ் | திமுக பணம் செலுத்திய பிரசாந்த் கிஷோர் 360 கோடி

பாட்டாளி மக்கள் கட்சியின் 2020-2021 ஆம் ஆண்டிற்கான பொது நிழல் நிதிநிலை அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. 
பாட்டாளி மக்கள் கட்சி  கடந்த 2003-04 ஆம் ஆண்டு முதல் பொது நிழல் நிதிநிலை அறிக்கைகளை  மக்கள் மன்றத்தில் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2020-21 ஆம் ஆண்டுக்கான, 18-ஆவது பொது நிழல் நிதிநிலை அறிக்கையை சென்னை தியாகராயர் நகர் பர்கிட் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதன் நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டார். நிகழ்ச்சியில் பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
உலகத்தர உயர்கல்வி நிறுவனங்கள் உருவாக்குதல், வேளாண்மைக்குப் பாதுகாப்பு அளித்தல், பாசனப் பரப்பை இருமடங்காக்குதல், வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழித்தல், மகளிர் பாதுகாப்பு, வறுமை ஒழிப்புக்காக ஏழைகளுக்கு நிதியுதவி, தொழில் வளர்ச்சியை அதிகரித்தல், நிர்வாக சீர்திருத்தம், வெளிப்படைத்தன்மை ஆகிய 10 அம்சங்களுக்கு முன்னுரிமை அளித்து பொது நிழல் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
பாமகவின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை நேற்று வெளியாகியிருந்த நிலையில் இன்று பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  

Post a comment

0 Comments