திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் ஊடக சந்திப்பு

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு நடைபெற்ற பாராட்டு மற்றும் வழிகாட்டும் கூட்டத்திற்கு பின் நடந்த திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் ஊடக சந்திப்பு.

திமுக பொய் பிரச்சாரம் - இந்து மதத்தை மட்டும் அவமானப்படுத்தும் தி.மு.க
நடிகர் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனைக்கும், பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மத்திய முன்னாள் அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றார். 
தொடர்ந்து, நடிகர் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில் எந்த உள்நோக்கமும் இல்லை. விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனைக்கும், பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்தார்.

மேலும், ரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும். அதன் பிறகு அவரது  கொள்கைக்கு ஏற்ப கூட்டணி அமைப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் கூறியுள்ளார். 

Post a comment

0 Comments