Responsive Ad Slot

ஏன் மோடியை ஆதரிக்க வேண்டும்

No comments

Tuesday, 7 May 2019

நாம் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்க ...

மே மாதம் 2013 ஆம் ஆண்டு, 1 அமெரிக்க டாலரின் இந்திய மதிப்பு 54 ரூபாய். ஆனால்.. ஆகஸ்ட் 2013 அன்று இதே 1 டாலரின் மதிப்பு 68 ரூபாய். 2 1/2 மாதத்தில் இந்திய நாணய மதிப்பிழப்பு 27%. அதாவது இந்தியா அப்போது கிட்டதட்ட கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தது. குளோபல் ரேட்டிங் ஏஜென்ஸீஸ்கள் அந்த நேரத்தில் இந்தியாவை ஃபிராஜைல் ஃபைவ் வரிசையில் குறிப்பிட்டது. அதாவது... இந்தியா எந்த நேரத்திலும் சரிந்து போகும் நிலையில் இருந்தது. அந்த சமயத்தில் அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மேற்கொண்டு கடனாக 40 பில்லியன் USD களை பிரத்யேகமாக NRI களிடமிருந்து மிக மிக அதிகப்படியான வட்டிக்கு கடனாகப் பெற்றார். இதில் ஒரு கூடுதல் விசேஷம்... அவர்கள் (NRI) பெற்றுக்கொள்ளும் வட்டிகளுக்கு டாக்ஸ் கிடையாது என்பதே. இதன் மூலம் இவரால் ஏற்படுத்தப்பட்ட நெருக்கடி மேலும் 3 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் அங்குள்ள NRI கள் அங்கு கடன் வாங்கி இவரிடம் முதலீடு செய்தார்கள். முதலீடே இல்லாமல் வட்டியிலேயே மில்லியன்களை சம்பாதித்தார்கள். அதன் பிறகு 2014 மே மாதம் மோதிஜி ஆட்சி வந்தது.

இரண்டு வருடங்களுக்கு முன் (2016) நம் அரசாங்கம் வாங்கிய கடனை திரும்ப செலுத்த வேண்டிய தருணத்தில்... ஒட்டு மொத்த ஆய்வாளர்களும், ஏன் இந்திய பொருளாதார நிபுணர்களும் கூட இந்திய பண மதிப்பீடு 1 டாலருக்கு 80 ரூபாயைத் தொடும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் நிகழாமல் நம் அன்னியச் செலாவணி கையிருப்பு மிகவும் உயர்ந்து ஒரு ரெகார்டை உருவாக்கியது. ஆம்... அது $400 பில்லியன் ..! நம் பணமதிப்பு உயர்ந்து ஒரு ஸ்திர நிலையை அடைந்தது. ஆம்.. 2017 - 18 இல் இந்தியா மட்டுமே குளோபல் பினான்ஷியல் கிரைஸிஸிலிருந்து மேம்பாட்டைந்த ஒரே பெரிய நாடு..! இதன் ஒரே காரணம் மோதிஜியின் ஆட்சிமுறை. இதன் மூலம் சொல்ல வருவது என்னவென்றால்... இதே ஆகஸ்ட் 2013 ஆம் ஆண்டு, இந்திய பணத்துடன் சேர்ந்து வெனிசுலா நாட்டுப் பணமான போலிவரின் (BOLIVAR) மதிப்பு 1 டாலர் அமெரிக்க பணத்திற்கு 68 போலிவர். இன்று.. அதாவது 4 ஆண்டுகள் கழித்து அதன் எக்ஸேஞ்ச் ரேட் நினைத்துக் கூட பார்க்க முடியாதது. ஆம்... 1 US$ = 1 லட்சம் போலிவர். அதாவது பண வீக்கம் 20% லிருந்து 4000% க்கு தள்ளப்பட்டுள்ளது. ஒரு ப்ளாட் வாங்க 15 வருடங்களுக்கு முன் அந்த நாட்டவர்கள் செலவிட்டது இன்று ஒரு கப் காஃபி வாங்க உபயோகப்படுகிறது. இதில் கொடுமையிலும் கொடுமை உலகத்திலேயே அதிகப்படியான எண்ணைவளம் பொருந்திய நாடு வெனிஸுலாதான். சரி.. இந்த நெருக்கடிக்கு காரணம் என்னவென்றால்... சோஷலிஸம் என்கிற பெயரில் நிகழ்ந்த மோசமான ஊழலும் மட்டமான ஆட்சியும்தான். தற்போதய காலத்தில் கருப்புப்பணம் என்பது மிகவும் சகஜமாக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் முக்கிய காரணம்... அமெரிக்க அனுமதி இவர்களின் நிலமையை மேலும் தூண்டிவிட்டது. மக்களுக்கு வழங்கப்படும் மானியமும், மிகக் குறைவானவர்களே டாக்ஸ் கட்டும் நிலையும்தான். அதோடு வெனிஸுலாவில் நடக்கும் வியாபாரங்களில் 45% அதிகாரப் பூர்வமற்ற முறையிலேயே நிகழ்கின்றன. நண்பர்களே... மோதிஜி அவர்களின் பிஜேபி அரசு மட்டும் 2014 இல் ஆட்சிக்கு வரவில்லையென்றால்.. நம்பினால் நம்புங்கள் இன்னும் 15 வருடத்தில் இந்தியாவும் வெனிஸுலாவை விட கேவலமான நெருக்கடியை சந்தித்திருக்கும். மோதிஜி ஆட்சியை நாம் ஆதரித்த ஒரே காரணத்தால் மட்டுமே நாம் நம்மை மட்டுமல்ல நம் எதிர்கால சந்ததிகளையும் காப்பாற்றியுள்ளோம்..! இப்போதும் பல பிரகஸ்பதிகளும் பொருளாதார மேதைகளும் 😡😡“அச்சே தின்”😡😡 எங்கே என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்..! இங்கு நான் கூறிய எதையும் நீங்கள் அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டாம். சிறிதளவு கூகுளில் தேடினால் அத்தனை விஷயங்களும் வந்து விழும். தொலைத்துவிட்டுத் தேடினால் திரும்ப ஒரு முறை மோதிஜி போன்ற ❣யுக புருஷன்❣பிறக்க பல யுகங்கள் ஆகும். கடவுளாகப் பார்த்து நமக்கு இன்றளித்த, நம் கையில் கிடைத்த மாமணியை 2019 இல் தேர்ந்தெடுப்போம்..! 🇮🇳🇮🇳பாரத் மாதா கி ஜே!
Don't Miss
© 2017 -2021 AthibAn Tv Network Pvt Ltd