Type Here to Get Search Results !

நாடு முழுவதும் 88 தொகுதிகளில் நடைபெற்ற 2ம் கட்ட தேர்தலில் 63.50 சதவீத வாக்குகள் பதிவு

 நாடு முழுவதும் 88 தொகுதிகளில் நடைபெற்ற 2ம் கட்ட தேர்தலில் 63.50 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.



This image has an empty alt attribute; its file name is 63.50-percent-votes-were-recorded-in-the-2nd-phase-elections-held-in-88-constituencies-across-the-country-1024x630.webp


நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.

அதன்படி கடந்த 19ம் தேதி முதல் கட்ட நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில், 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு நேற்று 2ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. கேரளா (20 தொகுதிகள்), கர்நாடகா (14), ராஜஸ்தான் (13), மகாராஷ்டிரா (8), உத்தரபிரதேசம் (8), மத்திய பிரதேசம் (6), அசாம் (5), பீகார் (5), சத்தீஸ்கர் (3), மேற்கு வங்கம் (3), மணிப்பூர் (1), திரிபுரா (1), காஷ்மீர் (1) மற்றும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு, 2ம் கட்ட தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன.

ஆனால் மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் தொகுதியின் பகுஜன் சமாஜ் வேட்பாளர் மரணம் அடைந்ததால் அந்தத் தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள 88 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. 63.50 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக திரிபுராவில் 79.46 சதவீதமும், உத்தரபிரதேசத்தில் 54.85 சதவீதமும் குறைந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், 3ம் கட்ட தேர்தல் வரும் 7ம் தேதி நடக்கிறது. 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 94 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom