Type Here to Get Search Results !

2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோரை விடுவித்ததை எதிர்த்து சிபிஐ தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு

 2ஜி வழக்கில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோரை விடுவித்ததை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்கலாமா வேண்டாமா என்பது குறித்து டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

திமுகவுக்கு மிகப்பெரிய தலைவலியை கொடுத்த வழக்குகளில் 2ஜே வழக்கு. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தவர் ஆ ராசா.

அப்போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. 2ஜி அலைக்கற்றையை ஏலம் விடாமல், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கியதால், அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால், இந்த 2ஜி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி ஆகியோரை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது. அவர்களின் விடுதலையை எதிர்த்து சிபிஐ மேல்முறையீடு செய்தது. சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது குறித்து டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

அதாவது மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக ஆ.ராசா பதவி வகித்த போது, பொது ஏலத்திற்கு பதிலாக முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பின்பற்றப்பட்டது. இதன் மூலம் ஆ.ராசாவுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சிஏஐ குற்றம் சாட்டியுள்ளது. இதன் அடிப்படையில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேரை கைது செய்தது.

பல மாதங்கள் சிறையில் இருந்த பிறகு, அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 2018ல் விடுதலை செய்தது.

இந்த முடிவை எதிர்த்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை இரண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தை மார்ச் 19, 2018 அன்று அணுகின. மறுநாள் சிபிஐயும் உயர் நீதிமன்றத்தில் அவர்களின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவிப்பது சரியல்ல என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ வாதிட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. இந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom