Type Here to Get Search Results !

அதிமுக எதிலும் கவுரவம் பார்த்ததில்லை.... அதனால் அடிமைகள் என விமர்சிக்கப்பட்டோம்.... ஸ்டாலினுக்கு செல்லூர் ராஜூ பதில்



அதிமுக கெளரவம் பார்த்ததில்லை, முதல்வர் கெளரவம் பார்க்காமல் பாரதப்பிரதமரை நேராக சென்று சந்தித்து இருக்க வேண்டும், மத்திய அரசிடம் தடுப்பூசி பெறுவதில் சாணக்கியத்தனமாக தமிழக அரசு நடந்துகொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். 

மதுரை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா, பெரியபுள்ளான், அய்யப்பன் ஆகியோர் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில், மதுரை மாநகர் மற்றும் கிராமப்பகுதிகள் ஒவ்வொரு வீட்டிலும் காய்ச்சல் கண்டறியப்பட வேண்டும், கபசுர குடிநீர், மருந்துள், சத்து மாத்திரைகளை வழங்க வேண்டும். கொரானா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க வேண்டும். மளிகை பொருட்களை தாராளமாகவும், மலிவு விலையிலும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரையில் கொசுக்கள் உற்பத்தி பெருகி உள்ளது. அதனைக்கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும். ஆளுங்கட்சி ரவுடிசம், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவற்றை மாவட்ட  நிர்வாகம், காவல்துறை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்கை சந்தித்த செல்லூர் ராஜூ, அல்வா கொடுப்பது போல வெறும் நூறு பேருக்கு ஊசி போட்டுவிட்டு, இப்போது இல்லையென்று சொல்கின்றனர். எம்ஜிஆரை காண கூட்டம் கூடுவது போல தடுப்பூசி செலுத்திக்கொள்ள கூட்டமாக கூடியுள்ளனர். வெளிநாட்டில் தடுப்பூசி போட்டால் தான் அனுமதி என்றெல்லாம் சொல்கிறார்கள். முந்தைய ஆட்சியில் தடுப்பூசி குறித்து வேறு விதமாக பேசிய ஸ்டாலின், முதல்வரானதும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் என அவரே கூறியதால் மக்கள் தற்போது தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகின்றனர். 

தமிழகத்தில் தடுப்பூசி அதிகமாக கிடைக்க வேண்டும். கொரானா உயிரிழப்புகள் காரணமாக மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.  அதிமுகவினர் தங்கள் கெளவரத்தை எப்போதும் பார்த்தில்லை. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலு மக்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம். முன்னாள் முதல்வரும் துணை முதல்வரும் கெளரவம் பார்க்காமல் மத்திய அரசிடம் தேவையான உதவிகளை கேட்டுப்பெற்றனர். மத்தியில் உள்ள காங்கிரஸ் பாஜக என எல்லா ஆட்சியோடும் இணக்கமாக இருந்து தமிழகத்திற்கு தேவையானவற்றை பெற்றோம். இதனால் எங்களை திமுகவினர் அடிமை அரசு என விமர்சிக்கவும் செய்தனர். 

மத்திய அரசிடம் தடுப்பூசி பெறுவதில் சாணக்கியத்தனமாக தமிழக அரசு நடந்து கொள்ள வேண்டும். தமிழக மக்கள் ஸ்டாலினை நம்பி வாக்களித்துள்ளனர். கொரானா பாதிப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. முதலில் மாநில முதல்வர் என்பவர் கெளரவம் பார்க்க கூடாது. கொரானா நடவடிக்கைகளுக்காக தடுப்பூசி பெற ஸ்டாலின் பாரத பிரதமரை பார்க்க நேரடியாக சென்றிருக்க வேண்டும், அப்போது மக்கள் ஸ்டாலினை பாராட்டியிருப்பார்கள், அதை விட்டுவிட்டு கொரானா மருத்துவமனைக்கு பிபிஇ கிட்டுடடன் செல்வதை பெரிதாக பேசுகிறார்கள் என கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom