Type Here to Get Search Results !

கஜூராஹோவில் உள்ள கோவிலின் அதிசய ஆச்சிர்ய தகவல்கள்...

 

பெரும்பாலும் கஜூராஹோவில் உள்ள கோவில் சிற்பங்கள் சிற்றின்பத்தை சித்தரிப்பதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு நினைக்கும் மனிதர்கள் பெரும்பாலும் அங்கே காணக்கிடைக்கும் அன்றாட வாழ்வியல் சிற்பங்களை கண்டு கொள்ள தவறிவிடுகிறார்கள் அல்லது புறக்கணிக்கிறார்கள்.

வாழ்வின் பல்வேறு அம்சங்களை, புராண கதைகளை பல்வேறு மதசார்பற்ற விழுமியங்களை, இந்து மதத்திற்கு முக்கியமான ஆன்மீக மதிப்புகளை இச்சிற்பங்கள் காட்சிப்படுத்துகின்றன. உதாரணமாக, பெண்கள் ஒப்பணை செய்வதை போன்ற காட்சிகள், இசைகலைஞர்கள் இசைப்பதை போன்று, குயவர்கள், விவசாயிகள் மற்ற இடைகாலத்தில் தோன்றிய மற்ற பிற மக்களின் அன்றாட வாழ்வியலை காட்சிப்படுத்துவதாக அவை அமைந்துள்ளன.

கஜூராஹோ கோவில்கள் ஆய்வுக்கு மிக உவப்பான ஒரு தலைப்பாகவே எப்போதும் இருந்து வருகிறது. காமத்தை அவை சித்தரிப்பதாக இருந்த போதும், அது மட்டுமே அவை அடையாளப்படுத்தியதா என்றால்.. இல்லை என்பதே பதில். நம் நிதர்சனத்தில் கண்டுணராத மற்ற சில உண்மைகளும் உண்டு. மனதை ஈர்க்கும் வகையில் அமையப்பெற்று அழகுற செதுக்கப்பட்ட சிற்பங்களை தவிர்த்து இந்த கோவில்கென்று மனதை கவரக்கூடிய வரலாறும் உண்டு. உதாரணமாக இந்த கோவில்களை கட்டியவர் யார் என்று தெரியுமா?

இந்த கோவில்கள் கி.பி 900 மற்றும் 1130க்கும் இடையில்ர்க் சண்டெல்லா ஆட்சியாளர்களால் கட்டப்பட்டன. இந்த வம்சாவளியில் வந்த ஒவ்வொறு ஆட்சியாளர்களும் தாங்கள் பின்பற்றிய பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொறு கோவில்களையும் கட்டினர். இது சண்டெல்லா வம்சத்தின் பொற்காலமாக இருந்தது எனலாம்.

கஜுராஹோவில் கிடைக்ககூடிய முதல் பதிவென்பது அபு ரிஹான் அல் பிருணியை நோக்கி கிபி 1022 வரை பின்செல்கிறது, பின்பு ஒரு அரபு பயணி இப்ன் படூட்டாவின் காலமான கிபி 1335 வரையும் செல்கிறது. கஜூராஹோ 85 கோவில்களை உள்ளடக்கியது. போதிய பராமரிப்புக்கும் அக்கறைக்கும் பின் தற்போது 25 கோயில்களே எஞ்சியுள்ளன. ஒன்பது சதுர மைல்கள் பரப்பளவில் இந்த அனைத்து கோவில்களும் ஆங்காங்கே கட்டப்பட்டுள்ளன.

சாண்டெல்லா ஆட்சியாளர்கள் கஜூராஹோவின் முழுமையையும் ஒரே சுவரால் அடைத்து வைத்திருந்தனர். கிட்டதட்ட 8 வாயில்கள் நுழைவதற்கு அல்லது வெளியேறுவதற்கு பயன்படுத்தப்பட்டன.

இந்த ஒவ்வொறு நுழைவாயில்களும் இரண்டு பனை மற்றும் பேரிச்சை மரங்களால் சூழப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது. இந்தி மொழியில் கஜுரா என்பது பேரிச்சை என்றும், வஹிகா என்பது சுமப்பது என்றும் பொருள்படுவதால் இந்த கோவில்கள் "கஜூரா - வஹிக்கா"' என அழைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. வரலாற்றில் கஜூராஹோ என்னும் இடம் "ஜெஜக்புத்தி' எனவும் விவரிக்கப்பட்டுள்ளது.

கஜூராஹோ கோயில்கள் ஒன்றாக கட்டப்பட்டிருந்தாலும் அவை இந்து மதம் மற்றும் சமணம் என இரண்டு மதங்களுக்கென அர்பணிக்கப்பட்டது. இரண்டு மதங்களுக்கும் இடையே இருக்கக்கூடிய மாறுபட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்வதற்கும் மதிப்பதற்கும் பரிந்துர்ரைக்கும் வகையில் இவை கட்டப்பட்டன.

சண்டெல்லா வம்சத்தின் வீழ்ச்சிக்கு பின், 13 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்த முகலாயர்களின் எழுச்சிக்கு பின் பெரும்பாலான கோவில்கள் அழிக்கப்பட்டன மற்றும் சில புறக்கணிக்கப்பட்டன.

கஜூராஹோ அமைந்துள்ள தொலைவும் அது அமைந்திருக்கும் தனித்த இடமுமே அதனை முழுமையான அழிவிலிருந்து காத்துவந்துள்ளது. இந்த கோவில்கள் புறக்கணிக்கப்பட்டதாலேயே பல நூற்றாண்டுகளாக காடுகளும், விவசாயமும் வளர்ந்தது. பின்னொரு காலத்தில் பிரிட்டிஷ் பொறியாளரான டி.எஸ் ப்ருட் அவர்களின் முனைப்பில் இந்த கோவில்கள் மீண்டும் புதிதாக வெளிக்கொணரப்பட்டது. இந்த கோவில்களுக்கு பல யோகிகள் ரகசியமாக வருகை புரிவதாகவும் பல இந்துக்கள் யாத்திரைக்காக வருவதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom