Type Here to Get Search Results !

மக்களுக்கு விரோதமாக செயல்படும் காங்கிரஸை தூக்கி எறியுங்கள்..... பிரதமர் மோடி உரை...!


செய்து முடிக்க இன்னும் பல பணிகள் இருக்கிறது, மக்களுக்கு விரோதமாக செயல்படும் காங்கிரஸை தூக்கி எறியுங்கள், தேசிய ஜனநாயக கூட்டணியின் நல்ல திட்டங்களை ஆதரித்து பாஜகவுக்கு வாக்களியுங்கள், புதுச்சேரியின் புகழை மீட்டெடுப்போம் என மோடி எழுச்சியுரை யாற்றினார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பரப்புரைக்காக புதுச்சேரி வந்த அவர்,  லாஸ்பேட்டையில் பாஜகவின் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது. 


முக்கியமாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு புதுச்சேரியில் இரண்டு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறது. ஒன்று கடல்சார்ந்த துறையின் மேம்பாடு, அதில் கூட்டுறவுத்துறையை பலப்படுத்துவது, அதன் மூலமே மீன்பிடி பொருளாதாரத்தை, அதாவது நீல பொருளாதாரத்தை வலுப்படுத்தாமல் நமது நோக்கம் நிறைவடையாது என நம்புகிறது நமது அரசு நம்புகிறது. சாகர்மாலா திட்டங்கள் மூலமாக கடற்கரை மற்றும் மீனவ சமுதாயத்தில் மாற்றத்தை கொண்டுவர முடியும்,  கடற்கரை மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில், அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். 

 
மத்திய அரசு பல துறைமுகங்களை அமைத்துள்ளது,  தற்போதுள்ள துறைமுகங்களை திறமை வாய்ந்ததாக மாற்றுவது, மீனவர்களுக்கு மேலும் கடன் உதவி வழங்குவது, மீனவர்களை விவசாய கடன் அட்டை திட்டத்தில் இணைப்பது,  மீனவர்களுக்கு புதிய நவீனமான தொழில்நுட்பத்தில் அவர்களை உறுதிப்படுத்துவது, ஆகவே மீன்வளத்துறைக்கு சென்ற ஆண்டு  46 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த  2014 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட 50 சதவீதம் அதிகமாகும். காங்கிரஸ் அரசாங்கம் கூட்டுறவுத்துறையை மேம்படுத்தவே இல்லை,  அதில் பல முறைகேடுகள் நடந்துள்ளன. 

குஜராத்தில் இருந்து நான் வந்திருக்கிறேன், அங்கு  கூட்டுறவுத்துறை மக்களின் வாழ்வில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. தேசிய கூட்டணி அரசு கூட்டுறவுத் துறையை தொழில் துறையாக மாற்ற உள்ளது. இது புதுச்சேரி மக்களுக்கு பெரும் உதவியாக அமையும், நாம் செய்து முடிக்க இன்னும் பல பணிகள் இருக்கிறது, மக்களுக்கு விரோதமாக செயல்படும் காங்கிரஸை தூக்கி எறிய வேண்டும். வாக்களிக்கும் போது தேசிய ஜனநாயக கூட்டணியின் நல்ல திட்டங்களை ஆதரிக்கவேண்டும், புதுச்சேரியின் புகழை மீட்டெடுப்போம்,  புதுச்சேரிக்கு அப்படிப்பட்டது ஆட்சி தாருங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன், பாரத் மாதாகி ஜெ.. இவ்வாறு அவர் பேசினார்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom