Type Here to Get Search Results !

பிரதமர் மோடியை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் பங்காரு அடிகளார் மரியாதை நிமித்தமாக சந்திப்பு....


தமிழகத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்க டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் இன்று பிரதமர் மோடி சென்னை வந்தார். சென்னை வந்த பிரதமர் மோடிக்கு அதிமுக, பாஜக தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். இதை தொடர்ந்து நேரு உள்விளையாட்டு அரங்கு விழா மேடைக்கு வந்த மோடி வண்ணாரபேட்டை - விம்கோ மெட்ரோ ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கியை நாட்டுக்கு அர்ப்பணித்து, பல நலத்திட்ட பணிகளையும் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் தமிழில் உரை தொடங்கிய பிரதமர் மோடி வணக்கம் சென்னை, வணக்கம் தமிழ்நாடு என்று பேசினார். தமிழக மீனவர்கள் நலன், தேவேந்திர குல வேளாளர் ஏற்பு உள்ளிட்டவற்றை பேசிய பிரதமர் மோடி அவ்வையார், மகாகவி பாரதியார் ஆகியோரின் பாடல்களையும் மேற்கொள் காட்டினார். 

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சென்னை வந்த பிரதமர் மோடியை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் பங்காரு அடிகளார் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது, பிரதமர் மோடிக்கு பங்காரு அடிகளார் பொன்னாடை போற்றி மரியாதை செலுத்தினார். அதுபோலவே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, டி.கே.ராகவன், அப்பல்லோ மருத்துவமனைகள் தலைவர் பிரதாப் ரெட்டி, மகள் பீரித்த ரெட்டி ஆகியோர் மரியாதை நிமித்தமாக  பிரதமர் சந்தித்தனர்.

இந்த சந்திப்பு குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி ‘இன்று சென்னையில் மதிப்பிற்குரிய பங்காரு அடிகளார் ஜியுடன் உரையாடியது மரியாதைக்குரியது. சமூகத்திற்கு சேவை புரிவதற்கான அவரது முயற்சிகள் ஊக்கமளிக்கிறது என பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom