Type Here to Get Search Results !

🔴LIVE | நேரலை | 29-11-2020 திருவண்ணாமலை கார்த்திகை தீப பெருவிழா | Tiruvannamalai Karthigai Deepam 2020

🔴LIVE | நேரலை | 29-11-2020 திருவண்ணாமலை கார்த்திகை தீப பெருவிழா | Tiruvannamalai Karthigai Deepam 2020

🔴LIVE | நேரலை | 29-11-2020 திருவண்ணாமலை கார்த்திகை தீப பெருவிழா | Tiruvannamalai Karthigai Deepam 2020

Posted by AthibAn Tamil News on Sunday, November 29, 2020


திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று கோவிலில் 9-ம் நாள் விழா நடைபெற்றது. இதையொட்டி காலை விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உற்சவ உலாவும், இரவு பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், அருணாசலேஸ்வரர் சமேத உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் உலாவும் நடந்தது. இதை காண திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழாவின் சிகர விழாவான மகா தீப தரிசனம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இன்று அதிகாலை 4 மணியளவில் கோவில் வளாகத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று மாலை 6 மணி அளவில் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.

கொரோனா பாதிப்பின் காரணமாக வெளி மாவட்ட பக்தர்களுக்கு திருவண்ணாமலைக்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இன்று பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.

கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. வெளியூர் பக்தர்கள் வருகையை தடுக்க 15 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து, போலீசார் கண்காணித்து வருகிறார்கள். மேலும் கோவில் வளாகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom