Type Here to Get Search Results !

கொரோனாவை வென்று இயல்புநிலைக்கு திரும்பியது வியட்நாம்

latest tamil news

சீனாவுடன் தன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடு, வியட்நாம். சீனாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று கண்டறியப்பட்டவுடன், சுதாரித்துக் கொண்ட வியட்நாம், தன் நாட்டு எல்லைகளை உடனடியாக மூடியது. அனைத்து வகைப் போக்குவரத்தையும் முடக்கியது. சமூக இடைவெளியைக் கட்டாயமாக்க, ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது.

ஆரம்பக் கட்டத்திலேயே இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டதால், 9.7 கோடி மக்கள் தொகை கொண்ட வியட்நாமில், வெறும், 270 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சிறப்பான சிகிச்சையால் அதில், 222 பேர் குணமடைந்துள்ளனர்; கொரோனாவால் அங்கு இதுவரை ஒரு இறப்புக் கூட இதுவரைப் பதிவாகவில்லை.

ஊரடங்கால் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு உதவ, இலவச அரிசி வழங்கும் ஏ.டி.எம்.,களைத் திறந்தது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் வந்ததால், கடந்த வாரம் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. சில கட்டுப்பாடுகளுடன் மெல்ல மொத்த நாடும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. முக கவசங்கள் அணிவது மட்டும் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

கொரோனாவைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தியதற்காக, உலக நாடுகளும், உலக சுகாதார அமைப்பும் வியட்நாம் அதிபர் நுயேன் பூ ட்ராங்கைக் கொண்டாடி வருகின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom