Type Here to Get Search Results !

கொரோனா குறித்து 12 முறை எச்சரித்த மத்திய புலனாய்வு அமைப்பு; உதாசீனம் செய்த டிரம்ப்



வாஷிங்டன்: கடந்த ஜனவரி முதல் பிப்ரவரி மாதம் வரை 12 முறை கரோனா தொற்று குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு (சிஐஏ) 12 முறை எச்சரித்ததாகவும், அதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உதாசீனம் செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் புலனாய்வு முன்னாள் அதிகாரி இது பற்றி தி வாஷிங்டன் போஸ்டில் தெரிவித்திருப்பதாவது, சீனாவில் பரவி வரும் கரோனா தொற்று உலக நாடுகளையும், அமெரிக்காவையும் பாதிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தொடர்ந்து எச்சரிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய மற்றும் முன்னாள் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தி வாஷிங்டன் போஸ்ட்டிடம், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ட்ரம்ப், 'அதிபரின் அன்றாட தகவல்கள்' பட்டியலில் தெரிவிக்கப்பட்ட எச்சரிக்கைகளை பலமுறை புறக்கணித்துவிட்டார், இது ஒவ்வொரு நாளும் விடியற்காலையில் தயாரிக்கப்பட்டு அமெரிக்க அதிபரின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டிய விஷயங்கள் அடங்கிய ஒரு முக்கியமான அறிக்கை. மிக முக்கியமான உலகளாவிய விஷயங்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் பற்றிய தகவல்கள் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். அப்போதே, உலக நாடுகள் பலவற்றிலும் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, சீனா பல முக்கிய தகவல்களை மறைத்து வருகிறது என்றும் அமெரிக்க அதிபருக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், கொரோனா தொற்றுக்கு எதிராக அமெரிக்கா முதல் நடவடிக்கையையே ஜனவரி இறுதியில்தான் எடுத்தது. அதாவது சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு மக்கள் வருவதைத் தடை செய்தது. பிப்ரவரி 26ம் தேதி கூட பொதுமக்கள் மத்தியில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இன்னும் ஓரிரு நாட்களில் கொரோனா தொற்று பாதிப்பு என்பது முற்றிலும் குறைந்து பூஜ்யமாகிவிடும், ஒட்டுமொத்தமாக ஒழிந்து போய்விடும் என்று கூறியிருந்தார்.

ஆனால் அதன்பிறகுதான் அமெரிக்காவில் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவியது. பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. நியூ யார்க் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அப்போதும், மார்ச் 10ம் தேதி பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமைதியாக இருங்கள், அது தானாகவே போய்விடும் என்று கூறியிருந்தார். அதற்கு மறுநாள், கரோனா தொற்று சர்வதேச பேரிடர் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.

உலகளவில் அமெரிக்காவே கரோனா தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. புதன்கிழமை நிலவரப்படி அமெரிக்காவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியது. இதுவரை 59 ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom