Type Here to Get Search Results !

தமிழக சட்டப்பேரவை தலைவர், துணை தலைவர்களின் அதிகாரங்கள் என்னென்ன...?

 

தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவை தலைவர் பதவிக்கு திமுக சார்பில் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு மற்றும் துணை தலைவர் பதவிக்கு தற்போது தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கு.பிச்சாண்டி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு இதுவரை வேறு யாரும் போட்டியிடாத நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் அப்பாவு மற்றும் கு.பிச்சாண்டி ஆகியோர் போட்டியின்றி தேர்வுச் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

அவ்வாறு தேர்வுச் செய்யப்படும் சட்டப்பேரவை தலைவர், துணை தலைவர்களின் அதிகாரங்கள் என்னென்ன?

அவர்கள் எவ்வாறு செயல்பாடுவார்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1.சட்டப்பேரவைத் தேர்தல் முடிவில், சட்டமன்றத்தை அதன் சட்டதிட்டப்படி நடத்துவதற்காக சட்டமன்றத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களில் இருந்து சட்டப்பேரவைத் தலைவர் ஒருவர் தேர்வு செய்யப்படுவார்.

2.சபாநாயகர் என்றும் அழைக்கப்படும் இவர் சட்டமன்றக் கூட்டத்திற்குத் தலைமைப் பொறுப்பை வகிப்பார்.

3.சட்டப்பேரவை கூட்டங்களின் போது உறுப்பினர்களின் கருத்துக்களை பதிவேடுகளில் சேர்க்கவும் தேவையற்ற கருத்துக்களை நீக்கவும் அதிகாரம் பெற்றவர்.

4.அவையில் விவாதங்கள் நடக்கும் போது உறுப்பினர்களின் கேள்விக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை பதிலளிக்க செய்வார்.

5.பேரவையில் மக்களின் குரலை சட்டமன்ற உறுப்பினர்களின் வழியே ஒலிக்க செய்வதில் சட்டப்பேரவை தலைவரின் பணி மகத்தானது.

6.இதுபோல் உறுப்பினர்கள் மீது கொண்டு வரப்படும் முறையீடுகளின் அடிப்படையில் உறுப்பினர்களை தற்காலிகமாகவோ கூட்டத் தொடர் முழுமைக்குமோ கலந்து கொள்ளத் தடைவிதிக்கும் அதிகாரமுடையவராகவும் இருக்கிறார்.

7.மேலும் அரசியல் கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த போதிலும் சட்டமன்றத்திலும், வெளியிடங்களிலும் பதவிக்காலம் முடியும் வரை கட்சி சார்பற்றவராகவே நடந்து கொள்ளவேண்டும் என்கிற விதிமுறையையும் இவர் கடைப்பிடிக்க வேண்டும்.

8.சட்டப்பேரவை அமைந்துள்ள பேரவை வளாக அலுவலகம் முழுமையாக பேரவைத்தலைவரின் கட்டுப்பாட்டில் இருக்கும். சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியோடு கருத்து வேறுபாடு கொண்டு தனியாகவோ, குழுவாகவோ செயல்படும் போது பேரவை உறுப்பினரை விளக்கம் கேட்கவோ,தனி அணியாக அங்கீகரிக்கவோ, பதவியை பறிக்கவோ சட்டப்பேரவை தலைவருக்கு உரிமையுண்டு.

9.சட்டசபை நடவடிக்கைகளில் சட்டப்பேரவை தலைவருக்கு தனி அதிகாரம் உள்ளது. அவையின் கண்ணியத்தை குலைக்கும் வகையில் அவை உறுப்பினர்களோ, அவைக்கு வெளியில் உள்ளவர்களோ செயல்பட்டால் ,அவர்களுக்கு விளக்கம் கேட்டு , நோட்டீஸ் அனுப்பி விளக்கம் சரியில்லை என்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்க அவைத்தலைவருக்கு உரிமையுள்ளது.

10.அவைத்தலைவர் உரிமையில் நீதிமன்றம் தலையிடாது. ஆனால் அவைத்தலைவர் ஒரு சார்பாக செயல்படுவது உறுதியானால் அப்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும்.

11.தேர்தல் மூலமே சட்டப்பேரவை தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். தேர்ந்தெடுக்கப்படும் சட்டப்பேரவை தலைவர் , ஆளுநர் சொல்லும் நாட்களில் பேரவையைக்கூட்ட வேண்டும். மேலும் பேரவை தலைவர் இல்லாத நாட்களில் சட்டப்பேரவை துணைத்தலைவரோ, அல்லது மாற்று தலைவராக நியமிக்கப்படும் மூத்த உறுப்பினர்களோ அவையை நடத்தலாம்.

12.பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தாலோ, உறுப்பினர் மறைந்தாலோ அத்தகவல் பேரவைத்தலைவர் வழியாகவே தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும்

13.சட்டப்பேரவைக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது என்ற பிரபலமான இந்த வாசகங்களுக்கு சொந்தக்காரர் 1980- களின் மத்தியில் சபாநாயகராக இருந்த பி.எச். பாண்டியன். அவர் சபாநாயகராக இருந்தபோது எடுத்த முடிவுகள் நாடு முழுவதும் பரவலான கவனத்தையும் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் பெற்றவை. சபாநாயகராக சில முன்மாதிரி தீர்ப்புகளையும் அளித்தவர்.

14.சட்டப்பேரவையை அமைதியாக, மக்கள் பிரச்னைகளை, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பேசும் வகையில் நடத்துவதில், சட்டப்பேரவைத் தலைவரின் பங்கு முககியமானது

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom