கேரளாவின் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றார்.
மதியம் 12 மணி முன்னிலை:

பாஜக: 243
காங்கிரஸ்: 94
சமாஜ்வாடி: 33
திரிணாமுல் காங்கிரஸ்: 30
திமுக: 21
தெலுங்கு தேசம்: 16
ஐக்கிய ஜனதா தளம்: 15
சிவசேனா (உத்தவ்): 10
தேசியவாத காங்கிரஸ்: 8
சிவசேனா (ஷிண்டே): 6
லோகஜனசக்தி: 5
ராஷ்ட்ரிய ஜனதா தளம்: 4
ஆம் ஆத்மி: 4
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்: 4
அதிமுக: 1
அண்டை மாநிலமான கேரளாவில் வாக்குப்பதிவு நிலவரம் சுவாரஸ்யமாக உள்ளது. மொத்தமுள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) கூட்டணி 17 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணி 2 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் நடிகர் சுரேஷ் கோபி முன்னிலை வகிக்கிறார். சுரேஷ் கோபி 206378 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுனில்குமார் 168612 வாக்குகள் பெற்றுள்ளார்.