
லடாக் எல்லையில் நிலவும் நிலைமை குறித்து முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவம் விமானம் கடற்படைகளின் தலைமை தளபதிகளுடன் ராணுவ அமைச்சர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
லடாக் எல்லைப்பகுதியில் சீனா ராணுவத்தை குவித்ததால் இந்தியாவும் ராணுவத்தை குவித்தது. இதனால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து எல்லைப் பிரச்னைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் லடாக் பகுதியில் உள்ள நிலைமை குறித்து முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் ராணுவ தலைமை தளபதி நரவானே விமானப்படை தலைமைதளபதி பதுாரியா கடற்படை தளபதி கரம்பீர் சிங் ஆகியோருடன் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஆலோசனை நடத்தினார்.
லடாக் பகுதியில் அமைதி நிலவ இந்தியா பேச்சுவார்த்தியில் ஈடுபட்டாலும் எல்லையை பாதுகாக்கும் பணியில் சிறிதும் தளர்வு ஏற்படக் கூடாது என தலைமை தளபதிகளிடம் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியதாக ராணுவ அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.