Type Here to Get Search Results !

''கொரோனா பரவலை விரைவாக கட்டுப்படுத்தவே, அதிக பரிசோதனைகள் செய்யப்படுகின்றன,''

பன்றிக்காய்ச்சலுக்கு சுய ...

''கொரோனா பரவலை விரைவாக கட்டுப்படுத்தவே, அதிக பரிசோதனைகள் செய்யப்படுகின்றன,'' என, சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை, திரு.வி.நகரில் அமைந்துள்ள மருத்துவ முகாமை ஆய்வு செய்த, அவர் கூறியதாவது:

முழு ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி, 30 நிரந்தர பரிசோதனை மையங்கள், 10 நடமாடும் சோதனை மையங்கள் வாயிலாக, அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. முன்கூட்டியே கண்டறிந்து, நோய் பரவலை கட்டுப்படுத்தவே, அதிக பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.மேலும், பிற மாவட்டங்களில், தீவிர பரிசோதனைக்கு பின், மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், 'இ - பாஸ்' வழங்குவது கூட கட்டுப்படுத்தப்பட்டு, அவசர தேவைக்கேற்ப வழங்கப்பட்டு வருகிறது.

தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் முறைகேடுகளை கண்டறிய, ஐ.ஏ.எஸ்., அதிகாரி அஜய் யாதவ் தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது.அதிகமான கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் மீது, '104' என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். அந்த புகார் மீது, ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையிலான குழு நடவடிக்கை எடுக்கும்.
நோய் தொற்று அதிகரிக்காமல் தடுக்க, சென்னை மட்டுமின்றி, அனைத்து மாவட்டங்களிலும், பரிசோதனையை அதிகரிக்க, அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு, தலைமை் செயலர் அறிவுறுத்தி உள்ளார். இவ்வாறு, ராதாகிருஷ்ணன் கூறினார்.