Type Here to Get Search Results !

ராகுல், இந்திய ராணுவத்தை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறார்

latest tamil news

காங்கிராஸ், எம்.பி., ராகுல், இந்திய ராணுவத்தை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறார் என பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி., நட்டா குற்றம் சுமத்தி உள்ளார்.

இதுகுறித்து நட்டா கூறியுள்ளதாவது: காங்கிரஸ் எம்.பி., ராகுல், நாட்டை பிரிக்க முயற்சிக்கிறார். ராணுவத்தை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறார். கடந்த, 2008ல், சீனா கம்யூனிஸ்ட் கட்சியுடன், காங்கிரஸ் செய்து கொண்ட ஒப்பந்தம் தான், இதற்கு காரணம். இந்த ஒப்பந்தத்தில், இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகள் பற்றி, இரு கட்சிகள் பேச்சு நடத்தி, ஆலோசிக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மோடியை சீனா புகழ்வது ஏன்?

இந்நிலையில் ராகுல் டுவிட்டரில் பதிவிட்டதாவது: சீனாவின் அத்துமீறலுக்கு எதிராக, நாம் அனைவரும் ஒருங்கிணைந்து நிற்போம். இந்தியாவின் எல்லைப்பகுதியை, சீனா ஆக்கிரமித்து உள்ளதா என, மத்திய அரசு முதலில் தெளிவுப்படுத்த வேண்டும். ஏனெனில், இந்த விவகாரத்தில், பிரதமர் மோடியை, சீனா தொடர்ந்து புகழ்ந்து வருவது, சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.