Type Here to Get Search Results !

வழிபாட்டு தலங்களும் இன்று முதல் திறக்கப்பட்டது : பின்பற்றப்பட வேண்டியவை...




தமிழகத்தில் கோவில்கள் உட்பட அனைத்து வழிபாட்டு தலங்களும் இன்று முதல் திறக்கப்பட்டது. இதனையடுத்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பக்தர்கள் தரிசனத்திற்கு வரும் வகையில், கோவில்களில் நேற்று துாய்மை பணிகள் உட்பட, தயார்படுத்தும் பணிகள் நடந்தன. இன்று முதல், பக்தர்கள் நிம்மதியுடன் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல துவங்கினர். வழிபாட்டு தலங்களில் பின்பறப்பட்ட வேண்டிய நடைமுறைகளை தமிழக அரசு தனித் தனியே வெளியிட்டுள்ளது.

கோவில்கள்:

* தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வருவோர்; சமூக இடைவெளியை பின்பற்றாதோர், முக கவசம் அணியாதோரை, கோவிலுக்குள் அனுமதிக்கக் கூடாது

* 65 வயதிற்கு மேற்பட்டோர், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம் தொடர்பான நோய், இதய நோய் உடையவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கோவிலுக்கு வருவதை தவிர்க்கும்படி, கோவில் நிர்வாகம் அறிவுரை வழங்க வேண்டும்

* கோவில் நுழைவு வாயிலில், தரமான கிருமி நாசினி வைத்து, பக்தர்கள் அனைவரும் கைகளை சுத்தம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்

* பக்தர்கள் இருமும்போதும், தும்மும்போதும் பயன்படுத்தும் கைக்குட்டை, திசுத்தாள் போன்றவற்றை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்

* பக்தர்கள் எச்சில் உமிழ்வதை தடை செய்ய வேண்டும்; நோய் அறிகுறி இல்லாத பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்

* கோவிலில் பக்தர்கள் செல்லும் வழிகளில், சமூக இடைவெளியை பராமரிக்க, தரையில் வட்டங்கள் வரைய வேண்டும்

* பக்தர்கள் ஒரு வழியில் உள்ளே சென்று, அடுத்த வழியில் வெளியே செல்லும் வகையில், ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இதர வாயில்களை பூட்டி வைக்க வேண்டும்

* சுவாமி சிலைகளை தொடக்கூடாது. கோவில்களில் நடக்கும் உற்சவங்களின்போது, பக்தர்களுக்கு அனுமதி கிடையாது

* பஜனை குழு, பக்தி இசை குழு ஆகியவற்றை அனுமதிக்கக் கூடாது; கோவில் தரைப்பகுதி தினமும் பலமுறை துாய்மை செய்யப்பட வேண்டும்

* 100 ச.மீ., அல்லது 1,075 சதுர அடிக்கு, 20க்கும் மேற்பட்ட பக்தர்களை அனுமதிக்கக் கூடாது. பக்தர்கள் அர்ச்சனை பொருட்கள் கொண்டு வர, அனுமதிக்கக் கூடாது
* பூஜை மற்றும் அபிஷேகம் நடக்கும்போது, உபயதாரர்கள் உட்பட, பக்தர்கள் யாரையும் உள்ளே அமர்ந்து பார்வையிட அனுமதிக்கக் கூடாது

* கோவில் உட்புறம் மற்றும் சுற்றுப் பிரகாரங்களில், 1 சதவீதம் சோடியம் ஹைபோகுளோரைட் கரைசல், மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை தெளிக்கப்பட வேண்டும்.

* கோவில் பிரசாதக் கடைகளில், விற்பனை செய்யப்படும் பிரசாதங்களை அங்கேயே உண்ணாமல், பொட்டலங்களாக எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்ய வேண்டும்

* கோவில்களில், திருமணம் உரிய நேரத்தில் மட்டும் நடக்க வேண்டும்; 50 பேருக்கு மேற்படாமல் அனுமதித்து, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை, உறுதி செய்ய வேண்டும் .இவ்வாறு, அரசு அறிவுறுத்தி உள்ளது.

தேவாலயங்கள்:

* கிறிஸ்துவ தேவாலயங்களில், பிரார்த்தனையின்போது, 2 மீட்டர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்

* தேவாலயங்களில் உள்ள மணி உட்பட எந்த பொருளையும், பிரார்த்தனைக்கு வருவோர் தொடக்கூடாது

* புனித நீர் தெளிப்பது போன்ற சடங்குகளை தவிர்க்க வேண்டும்.

மசூதி மற்றும் தர்கா

* மசூதி மற்றும் தர்காக்களில், தொழுகைக்கு வருவோர், தங்களுக்கு சொந்தமான விரிப்புகளை எடுத்து வர வேண்டும். பொதுவான விரிப்புகள், துண்டுகள், தொப்பிகள் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது

* ஒருவரை ஒருவர் கட்டித் தழுவுதல் கூடாது; 100 சதுர மீட்டர் பரப்பளவில், 20 பேரை மட்டும் அனுமதிக்க வேண்டும்; கூட்டம் சேருவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு, மத வழிபாட்டு தலங்களுக்கு, தனித்தனியே வழிகாட்டு நெறிமுறைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom