Type Here to Get Search Results !

சீனா தற்போது, பூடான் உடனும் எல்லைப் பிரச்னையில் ஈடுபட்டுள்ளது

Seeking solace in Bhutan's temples and rituals

 இந்தியாவுடனான எல்லைப் பிரச்னையை தொடர்ந்து, சீனா தற்போது, பூடான் உடனும் எல்லைப் பிரச்னையில் ஈடுபட்டுள்ளது.

சீனா பரந்துவிரிந்த நாடு என்பதால், பல்வேறு நாடுகளுடன் எல்லையை பகிர்ந்துள்ளது; எல்லையில் உள்ள சில நாடுகளுடன் எல்லைப் பிரச்னை தொடர்பாக மோதியும் வருகிறது. குறிப்பாக, தென் சீனக்கடல் முதல் லடாக் வரை உள்ள பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதில் சமீபத்தில், இந்தியாவுடனான எல்லைப் பிரச்னை அதிக பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சீனா தற்போது பூடான் உடனும் எல்லைப் பிரச்னையில் ஈடுபட்டுள்ளது.

சமீபத்தில், உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி கவுன்சிலின், 58வது கூட்டம் நடந்தது. இதில் சீனா, பூடானில் அமைந்துள்ள சாக்டெங் வனவிலங்கு சரணாலயத்தில் நடைபெற உள்ள புதிய திட்டம் ஒன்றுக்கு நிதி ஒதுக்குவதை தடுத்து நிறுத்த முயன்றது. அதோடு அந்த நிலப்பகுதி 'சர்ச்சைக்கு உரியது' என்றும் கூறியுள்ளது.

பூடான் - சீனா எல்லையில் அமைந்துள்ள சாக்டெங் சரணாலயத்தின் நிலப்பகுதி தொடர்பான எந்தப் பிரச்னையும், கடந்த காலங்களில் ஏற்படவில்லை. இதனால், சீனாவின் இத்தகைய நிலைப்பாடுகள் பலருக்கும் அதிருப்தி அளித்துள்ளது. பூடானில் சீனாவுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று, சீனாவின் இந்த சர்ச்சைக்குரிய பதிவுக்கு, 'சாக்டெங் வனவிலங்கு சரணாலயம் பூடானின் ஒருங்கிணைந்த மற்றும் இறையாண்மைக்கு உரிய பகுதியாகும்' என, பூடான் அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom